தன்னுடைய காலில் போட்டுக்கொள்வதை திருடி சென்ற இளசுகள்..! – மாஸ்டர் நடிகை சங்கீதா வெளியிட்டCCTV வீடியோ..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை சங்கீதா இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஆனந்த ராகம் உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை சீனர்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மாஸ்டர் ஆர் ஜெ பாலாஜியின் வீட்டில் விசேஷம் நடிகர் அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சங்கீதா.

sangeetha v

சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம், திருடர்கள் இரண்டு பேர் அவருடைய வீட்டிலிருந்து  அவர் அணியக்கூடிய காலணிகளை திருடி கொண்டு செல்லும் வீடியோ தான் அது. இந்த சம்பவம் சிசிடிவி தெளிவாக பதிவாகி இருக்கிறது.

sangeetha v

சென்னை கேகே நகரில் இருக்கக்கூடிய பி டி ராஜன் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரசித்து வருகிறார் நடிகை சங்கீதா இவருடைய வீட்டில் அடிக்கடி செருப்புகள் திருடு போய்க்கொண்டிருந்தது.

sangeetha v

இதனை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.  அதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பேர் நடிகை சங்கீதாவின் வீட்டு வாசலில் இருக்கும் செருப்பை திருடி செல்கின்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.

sangeetha v

தம்மாத்தூண்டு செருப்பை திருட விலை உயர்ந்த பைக்கில் வந்து திருடும் இந்த வினோத கொள்ளையர்களிடம் எச்சரிக்க இருக்கும்படி சங்கீதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மட்டுமில்லாமல் காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.