அமைச்சர் செந்தில் பாலாஜி கைது..! – மருத்துவமனையில் இருந்து வெளியான அதிரிச்சி தகவல்..!

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சற்று முன்பு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவருடைய உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அப்பொழுது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

தமிழக மின் துறை அமைச்சராக இருப்பவர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கிட்டத்தட்ட 81 பேரிடம்  1 கோடியே 62 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள் என்று காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

இதில் நடந்த முறைகேடு சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி அவரது சகோதரர் வீடு அலுவலகம் துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டவிரோத பணி பரமாற்ற தடைச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை தொடர்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்களா மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவருடைய சகோதரரின் அசோக் குமார் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8:30 துவங்கி நள்ளிரவு ஒன்று முப்பது மணி வரை கிட்டத்தட்ட 18 மணி நேரம் சோதனை செய்தனர்.

அதன் பிறகு கிடைத்த ஆவணங்களை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

அப்பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருடைய முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து திமுகவினர் தங்களுடைய கட்டணங்களை பதிவு செய்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அவருடைய சக அமைச்சர்கள் அவருடைய நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

அதில் அமைச்சர் மா சுப்பிரமணியன், எ.வா வேலு, சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்தனர், செந்தில் பாலாஜி பார்த்த பிறகு உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, திமுக மிசா-வையே பார்த்தவர்கள். பாஜக மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை கிளம்பி இருக்கிறது.

குறிப்பாக டாஸ்மாக்கில் அதிகப்படியாக வாங்கப்படக்கூடிய பத்து ரூபாயிலிருந்து 40 ரூபாய் பணம் எங்கே செல்கிறது ஒவ்வொரு நாளைக்கு எவ்வளவு கோடி ரூபாய் எங்கே செல்கிறது டாஸ்மாக்கில் உரிய பில் கொடுக்காமல் மதுபானம் விற்பனை செய்யப்படுவது அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிரம்மாண்ட பங்களா என பல்வேறு சர்ச்சைகள் செந்தில் பாலாஜியை வட்டமடித்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறது. இந்த கைது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.