நிஜத்தில் வயது குறைவானவரை திருமணம் செய்து – நிழலில் தன்னை விட 22 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சினேகா..!

தமிழ் சினிமாவில் புன்னகையாலேயே ரசிகர்களைச் சொக்க வைத்து புன்னகையரசி என்று கொண்டாடப்பட்ட நடிகையர்கள் இருவர். ஒருவர் கறுப்பு-வெள்ளைக் காலத்தில் கால்பதித்த கே.ஆர்.விஜயா. இன்னொருவர் சினேகா.

 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டு உள்ளார். 

 

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறருக்காக எந்த திரைப் படத்திலும் நடிக்காத நடிகை சினேகா வேலைக்காரன் திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார். 

 

இந்நிலையில் அதைத் தொடர்ந்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். ஏற்கனவே தனுஷுடன் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

தன்னை விட ஒரு வயது குறைவான நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா. தற்போது தன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார்.

 

முன்னதாக, நடிகைகள் கேத்ரீன் தெரேசா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் தற்போது சினேகா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் நல்ல மார்கெட் வைத்திருந்த அவருக்கு இந்த படம் நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என நம்புகிறாராம்.