கேப்டன் உடல்நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..! – பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் முன்னணி தமிழ் சினிமா நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலம் ஒன்றிய காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவருடைய உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்று மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் கடந்த 24 மணி நேரமாக கேப்டனின் உடல் நிலையில் சீரற்ற நிலை தான் நிலவுகிறது விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் கேப்டன் அவர்கள் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை அடுத்து தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் கேப்டன் வழக்கமான பரிசோதனைகளுக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது.

ஆனால், மியாட் மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கை ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் கூறியிருந்ததாவது, கேப்டனுக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.

விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு தொடர்ந்து இரண்டு வாரம் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமில்லாமல் கவலை அடைந்தனர்.

மேலும், கேப்டனின் தொண்டர்கள் சென்னைக்கு கிளம்பி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது தேவையற்ற பரபரப்பை உருவாக்கும் என்பதால் தற்பொழுது கேப்டன் அவர்களுடைய மனைவி பிரேமலதா அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தேமுதிக சொந்தங்களுக்கு கேப்டன் மீது வைத்திருக்கும் பற்று வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கு வணக்கங்கள்.

மருத்துவமனையை வெளியிட்ட மருத்துவ அறிக்கை வழக்கமான ஒன்றுதானே தவிர அதில் பதற்றப்படவோ பயப்படவோ ஒன்றும் கிடையாது. கேப்டன் நலமுடன் இருக்கிறார்.

அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. கூடவே மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது. அவரை அருகில் இருந்து நானும் செவிலியர்களும் மருத்துவர்களும் கவனித்து கொள்கிறோம்.

வெகு விரைவில் கேப்டன் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் நிச்சயம் கண்டிப்பாக சந்திப்பார். உங்களுடைய பிரார்த்தனைகள் எங்களுக்கு அவசியம்.

கடைக்கோடி தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், யாரும் பயப்பட வேண்டாம் என்று இந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.