“விஜய் மேல கோபம்..” இந்த மொக்க காரணத்திற்கு சண்டக்கோழி படத்தை மறுத்தார்..! லிங்குசாமி காட்டம்..!

நடிகர் விஜய் மீது கோபம் இருக்கிறது என சமீபத்திய பேச்சு ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படமாக இந்த ஆனந்தம் திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு, இவரது இயக்கத்தில் வெளியான ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றன.

லிங்குசாமிக்கு என தனி மார்க்கெட் ஓபன் ஆனது. சாக்லேட் பாய் என்ற இமேஜில் இருந்த மாதவனை ரன் என்ற ஆக்சன் படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக அடையாளம் காட்டியவர் இயக்குனர் லிங்குசாமி என கூறலாம்.

ஆனால், சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் இவருக்கு அடிமேல் அடி கொடுத்தன. குறிப்பாக நடிகர் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் ஆகியோர் கூட்டணியில் அஞ்சான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், வெளியான முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் பலரும் பதறி அடித்துக் கொண்டு திரையரங்கில் விட்டு வெளியே ஓடி வருவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

மேலும், இணைய பக்கங்களில் வைரலான எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்தை மிகப்பெரிய டேமேஜ் ஆக்கியது. படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டை இருந்ததால் படம் செல்ஃப் எடுக்க முடியாமல் தரை தட்டி நின்றது.

தொடர்ந்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் லிங்குசாமி இந்த படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விடவில்லை. தற்போது ஃபார்ம் அவுட் என்ற நிலையில் இருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி கலந்து கொண்டார்.

சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அவரிடம் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் பேசிய அவர் சண்டக்கோழி கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னேன்.

ஆரம்பம் முதல் இடைவேளை வரை விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக தான் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் படத்தின் இன்டர்வெல் வரை கதையை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் நடிகர் ராஜ்கிரண் கதாபாத்திரம் குறித்து நான் பேச ஆரம்பிக்கும் பொழுது கதை கேட்பதை நிறுத்திவிட்டார்.

இல்லன்னா.. இதுக்கு மேல இது சரிவராது.. என்று கூறுனார். நானும், கெஞ்சி கேட்டேன் இரண்டாம் பாதி கதையை.. இன்னும் கொஞ்சம் கேளுங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. என கூறினேன்.

ஆனால், ராஜ்கிரண் கதாபாத்திரம் உள்ளே வரும்பொழுது.. வேண்டவே வேண்டாம் என்று சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

அதன்பிறகு படம் வெளியாகி வெற்றியடைந்து வெற்றி விழா லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. அப்போது நடிகர் விஜய் அங்கே வந்து இருந்தார். என்னை பார்த்த நடிகர் விஜய் நேராக என்னிடம் வந்து சண்டைக்கோழி படம் பார்த்தேன் சூப்பரா பண்ணியிருக்கிங்கனா.. என்று கூறினார்.

அப்போது அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்தேன். நீங்க தான் இரண்டாம் பாதியில் கேட்காமலேயே என்னுடைய கதையை ரிஜெக்ட் பண்ணிட்டீங்க.. அப்போவே சொன்னேன்.. நீங்க தான் இரண்டாம் பாதியில் கேட்காமல் விட்டு விட்டீர்கள் என்று கூறினேன்.

அதற்கு விஜய், அட விடுங்கணா.. அப்போது நான் தவிர்த்ததால் தான் இப்போது விஷால் என்ற ஒரு நடிகர் வந்திருக்கிறார். அவர் இந்த கதை மூலமாக ஃபீல்டுல என்ட்ரி ஆகணும்னு இருந்திருக்கு.. என கூறியதாக லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.