40 வயதில் இரண்டாவது திருமணம்.. நிச்சயதார்த்தத்தை முடித்த பீஸ்ட் பட நடிகர்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகர், பீஸ்ட் பட நடிகர் அண்மையில் தனது நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார். இவருக்கு வயது தற்போது 40 தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இந்த நடிகர் பீஸ்ட் படத்தைப் பற்றியும், தளபதி விஜய் பற்றியும் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் அண்மை காலமாகவே திரை உலகில் அதிகரித்து வரும் இரண்டாவது திருமணம் மட்டுமல்லாமல் வயது அதிகமான நிலையில் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் இந்த பீஸ்ட் நடிகரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நடிகர்தான். இவர் நெடு நாட்களாக காதலித்து வந்த தனது காதலியை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

40 வயதை தொட்டு விட்ட இந்த மலையாள நடிகர் கேரளாவில் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த கடம்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் சால்ட் அண்ட் பெப்பர், 5 சுந்தரிகள்,கம்மாட்டிபாடம்,பறவ, மாய நதி, இஷ்க் ஆப்பரேஷன் ஜாவா, குரூப், குமாரி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கண்ணூர் ஸ்குவாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பீஸ்ட் படத்தில் இவர் வில்லன் கேங்கில் இருந்து வீரராகவனாக, விஜய்க்கு உதவி செய்யும் காட்சிகளில் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றியைத் தந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்தவர்.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ள வேளையில் தனுஜா என்ற மாடல் அழகியை காதலித்து வந்த இவர் புத்தாண்டு தினத்தை ஒட்டி நிச்சயம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

ஏற்கனவே தபீனா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவான இவர் மாடல் அழகிய மேல் ஏற்பட்ட காதலால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இதனை அடுத்து பல கிசு கிசுக்கள் மலையாள உலகில் எழுந்தது.

இப்போது அந்த நடிகர் யார் என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? நீங்கள் யூகம் செய்வது போல இந்த நடிகர் வேறு யாருமில்லை. ஷைன் டாம் சாக்கோ. இவர் தான் தற்போது தனது 8 வயது மகளையும், மனைவியும் பிரிந்து இரண்டாவது கல்யாணத்திற்கு தயார் ஆகிவிட்டார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.