சித்தா பட நாயகி நிமிஷா சஜயன் கிளுகிளு..! கிறுகிறுத்து கிடக்கும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எப்போதுமே தனிவரவேற்பு உண்டு. அதுவும் அழகான நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி விடுவர். அதற்கு உதாரணமாக, குஷ்புவுக்கே கோவில் கட்டியவர்கள் என்று கூறப்படுவது உண்டு. அதனால் தமிழில் நடிக்க பிற மொழி நடிகைகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 

ஆனால் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தெருவில் குப்பை அகற்றும் துப்புரவு தொழிலாளியாக நடிக்க ஒரு பிரபல நடிகை சம்மதிக்கிறார் என்றால், அது தன் நடிப்பின் மீது அவர் கொண்ட அபார தன்னம்பிக்கை, அழுத்தமான கதை மற்றும் கேரக்டர் மீதான புரிதலாகவும் இருக்கலாம்.

அந்த வகையில் சித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.

இவரது அப்பா மும்பையை சேர்ந்தவர். அம்மா கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இரண்டும் கலந்த ஒரு வித்யாசமான அழகில், கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார் நிமஷா சஜயன். சித்தா படத்தை தொடர்ந்து அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இவரது மலையரசி கேரக்டரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

நேற்று 4ம் தேதி, தனது 27வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த யதார்த்த அழகி நிமிஷா சஜயன், தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள், அவரது அழகில் சொக்கிப் போய் உள்ளனர்.