“சொட்டைதலையன்.. ஆளும்.. அவன் தலையும்..” முன்னணி நடிகரை கிண்டல் செய்த பாரதிராஜா..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை ஆரம்ப நாட்களில் நாகேஷின் நகைச்சுவையை அனைவரும் ரசித்திருப்போம். இதனை அடுத்து நம்மை நகைச்சுவையால் நனைய விட்ட காமெடி நடிகரை இயக்குனர் பாரதிராஜா உருவ கேலி செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஒரு காலத்தில் இந்த காமெடி நடிகருக்காக பல இயக்குனர்கள் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்கள் காத்துக் கிடந்தார்கள். அந்த சமயத்தில் இவரது கால்சீட் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். எனவே நாள் ஒரு மேனியும் பம்பரமாக பிஸி ஷெட்யூடிலில் வேலை செய்த காமெடி நடிகர் என்று இவரை கூறலாம்.

இந்த காமெடியன் பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த 16 வயதினிலே படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவருக்கு வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத வேளையில் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார்.

இந்த சூழ்நிலையில் இவருடைய அசிஸ்டன்டாக இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பணியாற்றிய சமயத்தில் காந்திமதியின் கணவராக அந்த படத்தில் நடிக்க அந்த காமெடி நடிகரை நடிக்க வைக்க சிபாரிசு செய்து இருக்கிறார்.

அப்போது தான் இயக்குனர் பாரதிராஜா அந்த காமெடியனை அவனும் அவன் தலைமுடியும் சொட்டை தலையோடு இருக்கிற அவன போய் நடிக்க வைக்கிறதா? என உருவ கேலி செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த கேரக்டரில் டெல்லி கணேசன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது.

இதை அடுத்து எப்படியோ பாரதிராஜாவிடம் அந்த காமெடி நடிகரை நடிக்க வைக்க சம்மதம் வாங்கிவிட்டார். பாக்யராஜ் சொன்ன காமெடி நடிகர் வேறு யாருமில்லை நடிகர் கவுண்டமணி தான். இந்த படத்தில் இவர் நடித்ததை அடுத்து பாரதிராஜா அவருக்கு சிவப்பு ரோஜா படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பையும் கொடுத்தார்.

எனவே கவுண்டமணி மிகச் சிறப்பான இடத்தை திரைத்துறையில் பெறுவதற்கு முக்கிய பணியை பாக்யராஜ் செய்தார் என்று கூட சொல்லலாம். தன்னை ஒரு மிகப்பெரிய இயக்குனரே உருவ கேலி செய்தார் என்பதை கூட எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் உத்வேகத்தோடு நின்று ஜெயித்தவர் கவுண்டமணி.