கேப்டன் 120 முறை பார்த்த ஒரே படம் – மனுஷன் அந்த நடிகர் மேல இம்புட்டு பாசக்காரரா இருந்திருக்காரே..? என்ன படம் தெரியுமா…?

நடிகர் விஜயகாந்த் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். வாலிபராக பிறகு, சினிமா வாய்ப்பு தேடி தனது நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் வந்தவர். விஜயராஜ் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்ற அவரை பார்த்து, ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, அப்புறம் எதுக்கு விஜயகாந்த் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கான வாய்ப்பு கிடைத்த போது, சிறந்த நடிகராக நிரூபித்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்தான் கேப்டன் விஜயகாந்த்.

இளைஞராக இருந்த காலகட்டத்தில், தினமும் இரவு சினிமாவுக்கு போவதுதான் விஜயகாந்துக்கு வழக்கம். நண்பர்களுடன் சேர்ந்து அவர் அதிகமாக செல்லும் இடமே சினிமா தியேட்டர்தான். அதிலும் எம்ஜிஆர் படங்கள் என்றால், விஜயகாந்துக்கு மிக மிக ஆர்வம் அதிகம்.

பல ஆண்டுகளுக்கு முன் இதுகுறித்து ஒரு நேர்காணலில் விஜயகாந்த் கூறுகையில், சின்ன வயதில் இருந்த எம்ஜிஆர் படங்களை மிகவும் விரும்பி பார்ப்பேன். அவரது சண்டை காட்சிகள் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுப்பிள்ளை படத்தை மட்டும் 120 முறை பார்த்துள்ளேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தை 70 முறை பார்த்துள்ளேன்.

நாடோடி மன்னன், அரசிளங்குமரி, மகாதேவி என அவர் நடித்த படங்களை எல்லாம் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது படங்களில் முன்பு போல சண்டைக்காட்சிகள் அதிகமாக இல்லையே என்று கூட வருத்தப்பட்டு இருக்கிறேன். நான் எம்ஜிஆர் ரசிகன் என்பதை விட, வெறியன் என்றே சொல்லலாம் என வெளிப்படையாக கூறியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.