அடையாளம் கொடுத்த அமீருக்கு கார்த்தி செய்த அநியாயம்..! இதெல்லாம் கடவுளுக்கே பொருக்காது நியாயமாரே..!

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி. இந்த படம்தான் அவரது அட்டகாசமான திரை பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்தது.

எப்போதுமே, அறிமுகமான முதல்படம்தான் ஒரு நாயகனுக்கு நல்ல கவுரவத்தை, அடையாளத்தை பெற்றுத் தருகிறது. முதல் படமே தோல்வியடைந்து விட்டால், அடுத்தடுத்த படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. அந்த வகையில் கார்த்தி என்ற மனிதரை, நாயகனாக்கியது இயக்குநர் அமரீன் பருத்திவீரன்தான்.

அதே போல் அவரது அண்ணன் சூர்யாவுக்கு நந்தா படம் வெளியாவதற்கு முன்பே, மௌனம் பேசியதே படம் மூலம் ஒரு நடிகராக சிறந்த அறிமுகத்தை தந்ததும் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான். இதை சூர்யாவும், மறுக்க மாட்டார். கார்த்தியும் மறுக்க முடியாது. சூர்யாவும், கார்த்தியும் இன்று பல கோடி சம்பளம் பெற ஆரம்பத்தில் உதவியவர், உழைத்தவர் இயக்குநர் அமீர் என்பதை தமிழ் சினிமா துறை நன்கு அறியும்.

இந்த சூழலில், சென்னை, கிண்டியில் நடந்த கலைஞர் 100 விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா, அமீரை பார்த்தவுடன் அருகில் வந்து, அண்ணா எப்படி இருக்கறீங்க என்று நலம் விசாரித்து, கட்டியணைத்து விட்டு சென்றிருக்கிறார். அப்போது வெற்றிமாறனும் அமீர் அருகில் இருந்திருக்கிறார். ஆனால், அவர்கள் இருந்த பகுதியில் பலமுறை முன்னும் பின்னும் நடந்து சென்று விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்த கார்த்தி, ஒருமுறை கூட அமீர் பக்கம் திரும்பவே இல்லையாம்.

பருத்திவீரன் என்ற படம் மூலம் கார்த்திக்கு, ஒரு நடிகன் என்ற அடையாளத்தை தந்தவரே அமீர்தான். தனது குருவாக மதிக்க வேண்டிய அவரை இப்படி கண்டுக்காமல், தலைக்கனத்துடன் நடந்துக்கொள்கிறாரே என அங்கிருந்த பலரும் முகம் சுளித்துள்ளனர். சூர்யாவிடம் காணப்பட்ட இங்கிதம் கூட கார்த்தியிடம் இல்லையே என்றுதான் பலரும் விமர்ச்சிக்கின்றனர்.