Legend Saravanan : லெஜண்ட் சரவணன் புதிய பட அறிவிப்பு..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கிளைகளை கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக பரந்து விரிந்து இருக்கிறது. இதன் உரிமையாளர் அண்ணாச்சி என தமிழக மக்களால் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன்.

விளம்பர படங்களில் முதலில் நடித்த அண்ணாச்சி, பிறகு அவரே தயாரித்த தி லெஜண்ட் படத்தில் நாயகனாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு அவரது பெயருக்கு பின்னே லெஜண்ட் என்ற புனைப்பெயர் ஒட்டிக்கொண்டது.

லெஜண்ட் சரவணன் இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார். அதனால் பொது நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும், தனது விலை உயர்ந்த சொகுசு காரில் புல் மேக்கப்பில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது போலவே வருகிறார்.

தனது எக்ஸ் பக்கத்தில், தனது அடுத்த படத்துக்காக செயல்பாடுகள் விரைவில் துவங்கி விட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சமீபத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதனால் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியின் அடுத்த பட அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சூரி நடித்த கருடன் படத்துக்கு பிறகு, துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக அவர் சொன்ன கதையை ஓகே செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

அதனால் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்து அவர் நடிக்க இருப்பதாகவும், அதற்காக டைரக்டருக்கு 3 மடங்கு சம்பளத்தை லெஜண்ட் கொடுத்தார் என்றும் சமீபத்தில் தகவல் பரவியது.

ஆனால் லேட்டஸ்ட் அப்டேட் ஆக லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.