வீரம் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பொண்ணா இது..? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே..!

பெண் பிள்ளைகள் சீக்கிரமாக வளர்ந்து விடுகிறார்களே என பலரும் சொல்கிற, ஆச்சரியப்படுகிற ஒரு விஷயமாக தான் இருக்கிறது. உதாரணமாக குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர், அடுத்த சில ஆண்டுகளில் இளம் நாயகிகளாக படங்களில் அறிமுகமாகி விடுகின்றனர்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா, அடுத்த ஏழெட்டு ஆண்டுகளில் ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்தார். சங்கர் குரு படத்தில் சிறுமியாக நடித்த பேபி ஷாலினி, காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மீனாவின் மகள் பேபி நைனிகா விஜய் நடித்த தெறி படத்திலும், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் பேபியாக நடித்தவர், இன்னும் சில ஆண்டுகளில் இளம்நாயகியாக ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் நாயகியாக அறிமுகமாகி விடுவார்.

வீரம்..

அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அஜீத்குமார், தமன்னா நடித்த வீரம் படத்தில் நடித்தவர்தான் பேபி யுவீனா பார்வதி. இதில் நாசரின் பேத்தியாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் இந்த குழந்தையிடம் விளையாடுவதாக சொல்லிவிட்டு, தன்னை கொல்ல வரும் எதிரிகளை பந்தாடுவார் அஜீத்.

குழந்தை நட்சத்திரம்.

வீரம் படத்தை தொடர்ந்து பேபி யுவீனா பார்வதி மஞ்சப்பை, அரண்மனை கத்தி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மாசு என்கிற மாசிலாமணி படத்தில், சூர்யாவுக்கு மகளாகவும் நடித்திருப்பார்.

அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக காணப்பட்ட யுவீனா பார்வதி, சமீபத்திய தனது புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதில் வளர்ந்த பெண்ணாக மிக அழகாக காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்தவர்கள், வீரம் படத்தில் குட்டிப்பெண்ணாக நடித்த பொண்ணா இது? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே, என்று ஆச்சரியப்படுகின்றனர்.