பதின்ம வயதில்.. பருவ மொட்டாக.. வானவில் நீச்சல் உடையில் இடுப்பழகி சிம்ரன்..!

தமிழ் சினிமாவில், அழகான நடிகைகளின் பொற்காலம் என கடந்த 1990களை சொல்லலாம்.

அப்போது அறிமுகமான பல நடிகைகளை இப்போது பார்த்தாலும் ரசிக்க தூண்டும் அழகில் அசத்தலாக இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட மிக அழகான நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன். இவருக்கு இடுப்பழகி சிம்ரன் என பெயர் வரக் காரணமே, பாடல் காட்சிகளில் இவரது நளினமான இடுப்பசைவு ரசிகர்களின் மனதை அள்ளிக்கொண்டு போகும்.

துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், நேருக்கு நேர், அவள் வருவாளா, வாலி, கண்ணுபடப் போகுதய்யா, ஜோடி, நட்புக்காக, விஐபி என சிம்ரன் நடித்த வெற்றிப் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சந்திரமுகி படத்தில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானது சிம்ரன்தான். ஆனால் கால்ஷீட் இல்லாததால் நயன்தாராவுக்கு அந்த வாய்ப்பு போனது.

எனினும் பல ஆண்டுகளுக்கு பிறகு பேட்ட படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் சிம்ரன். படமும் செம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன்..

சிம்ரன் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல படங்களில் கவர்ச்சியை தாராளமாக ரசிகர்களுக்கு அள்ளி வழங்கினார். அவரது உடல் கவர்ச்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்றும் அவரை ரசிக்கின்றனர்.

சிம்ரனை பொருத்தவரை மேக்கப் இல்லாமலேயே மிக அழகாக இருப்பவர். குறிப்பாக பிதாமகன் படத்தில், ஒரு பாடல் காட்சியில் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்.

அந்த பாடல் காட்சியில் சாதாரணமாக ஜீன்ஸ் பேண்ட் சர்ட்டில் பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தியிருப்பார்.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்த போது, கமலுக்கும் சிம்ரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ளவும் முடிவானது.

ஆனால் சிம்ரனை விட கமல் 24 ஆண்டுகள் வயது மூத்தவர் என்பதால், இந்த திருமணத்துக்கு சிம்ரன் பெற்றோர் தரப்பில் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதின்ம வயசு.. பருவ மொட்டு..

இந்நிலையில் பதின்ம வயசு, பருவ மொட்டு என்று வர்ணிக்கும் விதமாக நீச்சல் குளம் ஒன்றின் முன்பு நீச்சல் உடையில் காணப்படும் சிம்ரனின் இளமைக்கால புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

வானவில் நீச்சல் உடையில் சிம்ரனை ரசிக்கும் பல ரசிகர்கள் வைரமுத்து போல, வாலி போல விரைவில் கவிஞர்களாக மாறி விடுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.