என்னது.. இந்த ஐட்டம் பாட்டை பாடினது ஸ்ரீவித்யாவா..? கிறுகிறுன்னு வருதே..

நடிகை ஸ்ரீவித்யா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகையாக இருந்தவர். குறிப்பாக கண்ணழகி நடிகையாக ரசிகர்களை வசீகரித்தவர்.

ஸ்ரீ வித்யா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஸ்ரீ வித்யா. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருந்திருக்கிறார்.

கடந்த 1980களில் பல படங்களில் நாயகியாக, இரட்டை நாயகிகளில் ஒருவராக நடித்த அவர், பெரிய அளவில் நடிப்பில் முன்னிலை பெறவில்லை.

கமல்ஹாசன் விரும்பினார்.

ஒரு கட்டத்தில் முன்னிலை பெற முடியாத துணை நடிகைகளில் ஒருவராக இருந்தார். நடிகை ஸ்ரீ வித்யாவை ஆரம்ப காலத்தில் அபூர்வ ராகங்கள், உணர்ச்சிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்த போது நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீ வித்யாவை விரும்பினார். ஸ்ரீவித்யாவும் கமலை காதலித்தார்.

திருமணம் செய்துக்கொள்ளவும் ஆசைப்பட்டார். ஆனால், ஸ்ரீ வித்யாவின் அம்மா அந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

கர்நாடக இசைப்பாடகி

இதற்கிடையே ஸ்ரீ வித்யாவின் அம்மா, ஒரு கர்நாடக இசைப் பாடகியாக இருந்ததால், ஸ்ரீ வித்யாவும் முறைப்படி இசை கற்றுக்கொண்டார். அதனால் அவரது இனிமையான குரலில் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகியாக இல்லாமல், அக்கா, அம்மா நடிகையாக மாறினார் ஸ்ரீ வித்யா. மன்னன் படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருப்பார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இதையும் படியுங்கள்: மனைவியை பிரிந்த நடிகரை பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்..

அஜீத்குமாருக்கு அம்மாவாக

கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரன், கரணுக்கும், காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கும், உன்னைத்தேடி படத்தில் அஜீத்குமாருக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

ஆனந்தம் படத்தில் மம்முட்டிக்கு அம்மாவாக நடித்திருப்பார். காதலா காதலா படத்தில் ரம்பாவுக்கும் அம்மாவாக நடித்திருப்பார்.

ரிங்கு ரிங்கு…

இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டில் வெளிவந்த அமரன் படத்தில் நடிகை ஸ்ரீ வித்யா, ரிங்கு ரிங்கு என்ற குத்தாட்டம் ஐட்டம் பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு படத்தில் நடிகை டிஸ்கோ சாந்தி ஆடியிருப்பார்.

இதையும் படியுங்கள்: எல்லாமே பச்சயா தெரியுது.. மாடர்ன் அவுட் பிட்டில் மதமதன்னு நிற்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகர் கார்த்திக், பானுப்பிரியா நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக கார்த்திக் பாடிய வெத்தல போக்கு சோக்குல, நான் குத்துன பார் மூக்குல, சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே போன்ற பாடல்களும் ஜனரஞ்சகமானதாக இருந்தன.

ரிங்கு ரிங்கு பாடலை பாடியது நடிகை ஸ்ரீ வித்யாவா என இப்போது ரசிகர்கள் பலரும் தலை கிறுகிறுத்துப் போய் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.