விஜயகுமார் பேரை காப்பாத்திய வனிதா.. அடுத்த ராதிகா இவரா..? உடைந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் பழம்பெறும் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார்.

இவர் திருமணத்திற்கு முன்பே சந்திரலேகா ,மாணிக்கம், ஹிட்லர் பிரதர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெரிதாக பேசும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வனிதா விஜயகுமார்:

இதனால் சில ஆண்டுகள் திருமணம் செய்து கொண்டு கணவனோடு வாழ்ந்து வந்தார். இதனிடையே அடுத்தடுத்து தொடர் திருமணம் இவருக்கு தோல்வியில் முடிந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

குறிப்பாக வனிதாவின் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வயசு பெண் இருக்கும்போது அவர் மூன்றாவது ஆக திருமணம் செய்து கொண்டு கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் புகைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே வனிதா தன்னுடைய தந்தையான விஜயகுமாருடன் சொத்து தகராறால் பிரச்சனை ஏற்பட அவருடன் தகாத முறையில் பேசி அடிதடியில் ஈடுபட்டதால் அந்த குடும்பத்திலிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டு தற்போது தனியே வாழ்.ந்து வருகிறார்.

சர்ச்சையில் சிக்கிய தொடர் திருமணங்கள்:

இதனிடையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் தான் யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவருக்கு ஒரு நல்ல பிளாட்பார்மாக பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்தது.

அதன் பிறகு அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

youtube சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வீடியோக்களை வெளியிட்டு கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார்.

மறுவாழ்வு பிக்பாஸ் கொடுத்த:

இதனிடையே வனிதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளது. அவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்நிலையில் வனிதா பிரபல நடிகை ஆன சோனியா அகர்வால் உடன் சேர்ந்து தற்போது. தண்டுபாளையம் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் கொண்ட இந்த படத்தில் வனிதா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இவரின் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது தனது கருத்துக்களை கூறிய வனிதா கிட்டத்தட்ட ஆறு பெரிய இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் பண்ணி பாராட்டி இருந்தார்கள்.

ஹீரோயினாக வனிதா:

அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் நாங்கள் ராதிகாவை எப்படி பார்த்தோமோ அதே மாதிரி இப்போது உங்களை பார்க்கிறோம்.

உங்களது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என வாழ்த்தியதாக அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் அந்த காலத்தில் விஜயகுமார் சரத்குமார் இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படங்களாக இருந்தது.

அப்படித்தான் இந்த படத்திலும் விஜய குமாரையும் சரத்குமாரையும் ஒருசேர பார்த்தது போல ஒரு பீல் எங்களுக்கு இருந்தது என அந்த இயக்குனர்கள் வெகுவாக வனிதாவை பாராட்டி இருக்கிறார்கள்.

அடுத்த ராதிகா வனிதா:

இந்த பாராட்டுக்கள் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. என்னுடைய அப்பாவின் பட வரிசையில் என்னுடைய படத்தை வைத்து இயக்குனர்கள் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக வனிதா மிகவும் எமோஷ்னலாக பேசியிருந்தார்.

இது அடுத்து வனிதாவின் இந்த தண்டுபாளையம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறவேண்டும் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.