இதுக்கு மேல நடிக்காதிங்க.. இசை நடிகரிடம் நேரடியாகவே சொன்ன பிரபலம்..!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் அந்த பிரபல இசை அமைப்பாளர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் அவர் பல பாடல்களையும் பாடியும் இருக்கிறார்.

கச்சேரிகளில் கல்லா கட்டும் இசையமைப்பாளர்:

இவர் அவ்வப்போது கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார். இப்படி இசையமைப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல திறமையும் நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் வைத்திருந்தார்.

அந்த இசையமைப்பாளர் திடீரென நடிப்பின் மீது அலாதி பிரியம் வந்துவிட ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை மனதை பற்றிக் கொண்டதாம்.

இதனால் எப்படியாவது ஹீரோ ஆகிவிடவேண்டும் என தனது பாடல்களின் மூலம் பிரபலமான அவர் நடிப்பை கையில் எடுக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தொடர்ச்சியாக நடித்து வந்தாலும் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை அவருக்கு சரியான நடிப்பை வரவில்லை.

ஆனாலும் அவரின் பிரபலத்தை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முந்தியடித்துக் கொண்டு வருகிறார்கள்.

தயாரிப்பாளர்களை காலி செய்யும் நடிகர்:

அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கணும் ஒரு நல்ல அறிமுகமான முகத்தை வைத்து எடுக்க வேண்டும் என கனவோடு கோடம்பாக்கத்திற்கு வரும் பல தயாரிப்பார்களின் பணத்தை காலி பண்ணி அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கி விடுகிறாராம்.

இந்த இசையமைப்பாளரிடம் ஒரு சிலர் நேரடியாகவே உங்களுக்கு நடிப்பை வரவில்லை இத்தோடு மூட்டை கட்டி விடுங்கள் என முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்களாம்.

ஆனாலும், அந்த இசையமைப்பாளர் நடிகர் கனவை விடாமல் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறாராம்.

என் வாழ்நாளில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிடுவேன் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகள் எது கிடைத்தாலும் விடுவதில்லையாம்.

எல்லாவற்றிலும் கமிட்டாகி அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதனிடையே அவர் தனது பாடல்களை கச்சேரிகளில் கொண்டு போய் பாடல் பாடியும் லைவ் ஷோ கான்செர்ட் நடத்தியும் அதன் மூலமும் வருமானத்தை பார்த்து வருகிறார்.

இப்படி இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும். ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என வைத்துக் கொண்டு இருக்கிறார் அந்த இசையமைப்பாளர்.

நடிக்கவே தெரியாத ஆர்வக்கோளாறு:

இத்தனை வருடங்கள் நடித்து வந்தும் கூட ஒரு ஷாட் எடுக்கவே பல டேக்குகள் எடுக்கிறாராம். அந்த ஒரு டேக்கும் வேற வழியில்லாமல் இயக்குனர்கள் ஓகே செய்து வைக்கிறார்களாம்.

இப்படித்தான் அவரது நடிப்பு சென்று கொண்டிருக்கிறது. ஷூட்டிங் பாட்டில் சிலர் மறைமுகமாகவும் நேரடியாகவும் அவரை திட்டி தீர்த்து வந்தாலும் அது எல்லாம் காதில் கூட போட்டுக் கொள்வதே கிடையாதாம்.

இதுக்கு மேல நடிக்காதீங்க:

அந்த இசையமைப்பாளர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தின் விநியோகித்தர் ஒருவர் நடிகர். நடிகரின் படத்தை வாங்கி வெளியிட்டு பெருமளவு நஷ்டம் அடைந்து விட்டாராம்.

அந்த நடிகரின் வீட்டிற்கு நேரடியாக சென்று இதுமேல் படத்தில் நடிப்பதை விட்டு விடுங்கள் என முகத்திற்கு நேராக சொல்லிவிட்டார்.

ஆனாலும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம்.

இந்த எங்க போய் எப்போ முடியுமோ தெரியவில்லை என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.