ரஜினிகாந்த் விஜயகாந்த் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பொதுவாக இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களுக்கு இடையில் எப்போதுமே போட்டி இருக்கும்.

அவர்களது திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும்.அல்லது ஒருவர் அது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி விட்டால் அதற்கு போட்டியாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தை வெளியிட்டு அது அதற்கு வசூல் ஈட்டி சாதிப்பார்கள்.

நட்சத்திர நடிகர்களின் போட்டி:

அதுமட்டுமில்லாமல் இருவர்களின் ரசிகர்கள் பட்டாளம் தங்களது படங்கள் தான் பெரிது என அடித்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் மற்றும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் , அஜித் விஜய் இப்படி தொடர்ச்சியாக பல தலைமுறைகள் போட்டியாக இருந்து வந்த நடிகர்கள் நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் போட்டியால் இன்றி மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களாக இரு வேறுபட்ட பாதைகளில் பயணித்தவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் எது என்பதை பற்றி தற்போதைய தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் – விஜயகாந்த்:

1987 ஆம் ஆண்டில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஜயகாந்த் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

பிரபல இயக்குனரான கே பாலச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரும் சாதனை பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

நந்தினி என்ற செவிலியரின் கதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியது. படத்தில் உடன்பிறந்த ஏழு நபர்கள் மற்றும் வேலையில்லாத பெற்றோர்கள் உட்பட மிகப்பெரிய குடும்பத்தில் ஒரே சம்பாதனையாளராக பார்க்கப்படுபவர் சுகாசினி மட்டும்தான்.

விவாகரத்து, ஒரு சகோதரன் இழப்பு , ஓடிப்போன சகோதரி, தோல்வியுற்ற இரண்டாவது காதல் மற்றும் உறுப்பு தானம் இப்படி பல வாழ்க்கையில் கஷ்டங்களை தாங்கும் பெண்ணாக அந்த படத்தில் சுகாசினி நடித்திருப்பார்.

மனதில் உறுதி வேண்டும்:

இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அப்போதே பேசப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் வங்காளக் கடலே என்ற திரைப்பட பாடல் பலரது ஃபேவரிட் பாடலாக அனைவரது ரசனைக்கு உள்ளான பாடலாக பார்க்கப்படுகிறது.

மேலும் கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ற பாடலை பிரபல பாடகியான சித்ரா பாடியிருந்தார்.

மென்மையான குரலில் வெளிவந்திருந்த அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த பாடலாக பார்க்கப்படுகிறது.