என் மகளால் பள்ளியில் அரங்கேறிய கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை ஊர்வசி..!

நாடக நடிகர்களுக்கு மகளாகப் பிறந்த கவிதா ரஞ்சனி தனது இயற்பெயரை திரையுலகில் நடிப்பதற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர்.

அடுத்து மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக் கூடிய இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு இன்று வரை பெற்றிருப்பவர்.

நடிகை ஊர்வசி..

நடிகை ஊர்வசியை பொருத்த வரை தமிழ் திரை படங்களில் இயக்குனரும் பன்முகத் திறமையும் கொண்ட கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் பல்வேறு படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக் கூடிய நடிகர்களின் படத்தில் நடித்த இவர் விசுவின் படங்களில் மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றவர்.

முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஊர்வசியின் வயது 13 தான். அப்போதே நான் அம்மாவாகிவிட்டேன் என்று அண்மை பேட்டி ஒன்றில் கூட நகைச்சுவை உணர்வோடு பேசி இருக்கிறார்.

மகளால் பள்ளியில் அரங்கேறிய கொடுமை..

சினிமா திரையில் பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்ட இவர் தனது மகளை ப்ரீகேஜியில் படிக்க வைக்கும் போது மகளோடு ஒரு ஸ்டூடெண்ட் போல அந்த வகுப்பில் அமர்ந்து இருந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் குழந்தைகள் அனைத்தும் ஆன்ட்டி இங்க வந்து உட்காருங்க ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது போல என்னிடம் மிக சிறப்பாக பழகி விட்டார்கள்.

ஆசிரியர் அனைவரும் இனி நீங்கள் வகுப்பறையில் உட்கார வேண்டாம் வராண்டாவில் உட்கார்ந்தால் போதும் என்று என்னை ஒதுக்கி தொலைவில் உட்கார வைத்த போதும் ப்ரீ கேஜியை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் என்னை ஆன்ட்டி ஆன்ட்டி என்று அழைத்து வந்தார்கள்.

இந் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாமி உடையில் வந்த என்னை பார்த்த ஆன்ட்டி நீங்க அப்படியே போங்க நான் எவ்வளவு சமாளிச்சுக்கிறேன் என்று சொல்லி என் மகளை தன்னோடு வைத்துக் கொண்டு இருந்தார்.

ரகசியம் உடைத்த ஊர்வசி..

ஆனால் என் மகள் அந்த ஆன்ட்டியின் முகத்தை கைகளால் பிராண்டி எக்கச்சக்க சேட்டைகள் செய்து அந்த ஆயாவின் முகத்தில் அழுகையை வர வைத்து விட்டார்.
அதுமட்டுமல்லாமல் பள்ளியில் சேர்த்த ஒரு மாதமும் நான் அவளோடு பள்ளிக்கு சென்று வந்திருந்தேன்.

இவ அழுக ஆரம்பித்து விட்டால் மற்ற குழந்தைகள் அனைவரும் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்ற விஷயத்தை ஓபன் ஆக பகிர்ந்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஊர்வசியின் மகள் பள்ளியில் செய்த சேட்டைகள் பற்றி அவர் கொடுமைகளாக சித்தரித்து இருப்பது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மேலும் பொதுவாக குழந்தைகள் அனைவருமே புதிதாக பள்ளிக்குச் செல்லும் போது இது போன்ற அலப்பறைகளில் ஈடுபடுவார்கள்.

எனவே இது ஒரு மிகப்பெரிய விஷயம் அல்ல என்பது அவருக்கும் தெரிந்திருக்கும்.
எனினும் ஊடகத்திற்கு இதை வெளிப்படையாக சொன்னது சிறப்பானது என்று சொல்லி இருக்கிறார்கள்.