உனக்கு அது நீளமா இருக்கு.. லாயக்கு ஆகாது.. கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்..!

திவ்யா கோபி குமார் என்கிற இயற்பெயரை கொண்ட நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை ஆவார். 2000களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்த அபிராமி தொடர்ந்து வரவேற்பை பெற்ற ஒருவராக மாறினார்.

கேரளாவை சேர்ந்த இவர் முதன்முதலாக 1995இல் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சிறுமியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு சிறுமியாகவே நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு வானவில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அர்ஜுன் மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் வாய்ப்பு:

தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படமும் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. அதற்குப் பிறகு சார்லி சாப்ளின், சமஸ்தானம் என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அபிராமி.

ஆனால் அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் என்றால் அது விருமாண்டி திரைப்படம்தான். விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அபிராமி. அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த கதாபாத்திரம் அமைந்ததை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி சென்றார் அபிராமி. அதற்குப் பிறகு சில டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இவர் திரைத்துறையில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கடந்து வந்த பாதை:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை விருமாண்டி அபிராமி கூறும் பொழுது சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் வாய்ப்பு தேடி வந்த பொழுது நிறைய கொடுமைகளுக்கு உள்ளானதாக அவர் கூறுகிறார் .

முக்கியமாக அவரது தாடையை கேலி செய்து நிறைய பேர் பேசியிருப்பதாக கூறுகிறார். அதில் அவர் கூறும்பொழுது ”பல்வேறு ஆடிஷன்களில் கலந்து கொண்ட பிறகு என் காதுப்படவே அங்கு இருப்பவர்கள் எனது தாடையை கேலி செய்து பேசுவார்கள். எனது தாடை நீளமாக இருக்கிறது. எனவே நான் கதாநாயகியாக நடிப்பதற்கு தகுதி இல்லாதவள் என்று பேசியிருக்கிறார்கள்.

அதையெல்லாம் கேட்கும் பொழுது என்னுடைய தன்னம்பிக்கையே உடைந்துவிடும் நிலையில்தான் நான் இருந்திருக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் இருந்ததன் பலனாகதான் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டுயிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.