சூப்பர் சிங்கரில் அரங்கேறிய அவமானம்.. அந்த வீடியோவில் பேசியது நான் தான்..! எமோஷனான யாழினி..!

பெரும்பாலும் ரியாலிட்டி ஷோ என்று அழைக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் என்பவை மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வதற்காக இருக்குமே தவிர பலரது திறமையை உண்மையிலேயே வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறதா என்றால் அது ஒரு கேள்விக்குறியான விஷயம்தான்.

ஏனெனில் விஜய் டிவியில் வெகு காலங்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறு வயதிலேயே பாடுவதில் திறன் கொண்ட குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இதில் வெற்றி பெறும் சிறுவர்களில் எத்தனை பேர் பெரும் வாய்ப்பை பெற்ற பெரும் பாடகர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறியான விஷயமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக கலந்து கொண்டு வருபவர் பாடகி யாழினி.

சூப்பர் சிங்கரில் வந்த வாய்ப்பு:

இவர் ஒரு பேட்டி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில்  சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதலாவது சீசனில் இருந்து பங்கேற்று வரும் யாழினி மூன்றாவது சீசனில் பைனல் வரை சென்றிருந்தார்.

பைனலில் முதல் மூன்று நபர்களில் ஒருவராக வந்திருந்தார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஆக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து வளர்ந்த பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியருக்கு பதிலாக வளர்ந்தவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கினார் யாழினி.

ஆடிசனில் நடந்த நிகழ்வு:

இது குறித்த அவர் பேட்டியில் பேசும் பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தேன் அப்பொழுது ஆடிசனுக்காக சென்னையில் நான் கலந்து கொண்ட பொழுது என்னை யமுனை ஆற்றிலே பாடலை பாடச் சொன்னார்கள்.

அதை நான் பாடிய பொழுது நடுவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிறகு நான் இன்னும் நன்றாக பாட வேண்டும் என்று கூறி என்னை அனுப்பி விட்டார்கள். அப்பொழுது வெளியில் இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்கள் என்னிடம் கேட்டபொழுது நான் நடுவர்கள் பேசி வைத்து கொண்டு என்னை நிராகரித்து விட்டனர் என்று கூறியிருந்தேன்.

அப்பொழுது அதை சிறுப்பிள்ளைதனமாக நான் அதை கூறியிருந்தாலும் அந்த வீடியோ தற்சமயம் ட்ரண்டாகி வருகிறது. ஆனாலும் அதற்கு அடுத்த சீசனில் நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தொடர்ந்து அதில் பங்கேற்று வந்த பொழுது எட்டாவது சீசனில் மட்டும் நான் கலந்து கொள்ளவில்லை.

நேரடியாக ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்டேன். ஏனென்றால் எனக்கு 8 ராசி இல்லாத நம்பர். நான் அதிகமாக நியூமராலஜி பார்ப்பேன் எனது ஆனால் இது குறித்தும் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்து வந்தனர் சைக்காலஜி படிக்கும் ஒரு பெண் நியூமராலஜி எல்லாம் நம்பலாமா என்று கேட்கின்றனர். எனது நம்பிக்கை வேறு படிப்பு வேறு என்பது அவர்களுக்கு புரியவில்லை என்று கூறுகிறார் யாழினி.