ஒரே படத்தில் 12 கேரக்டரில் நடித்துள்ள அம்பிகாவின் முன்னாள் புருஷன்.. வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

தமிழில் குறைவான திரைப்படங்களில் மட்டும் நடித்து பெரிதாக வரவேற்பு பெறாமல் போனவர் நடிகர் ரவிகாந்த். நடிகை அம்பிகாவின் கணவரான இவர் இரண்டு வருடங்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

தமிழ் சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நடிகர் ரவிகாந்தின் வாழ்க்கை அவ்வளவாக சுமூகமான வாழ்க்கையாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரவிகாந்த்.

அதற்கு பிறகு தொடர்ந்து 1990 இல் 13 ஆம் நம்பர் வீடு, சின்ன முத்து போன்ற வெகு சில திரைப்படங்களில் தான் நடித்தார். தொடர்ந்து அவருக்கு வரவேற்பு என்பதே பெரிதாக இல்லை 10 வருடங்களிலேயே அதிகபட்சம் ஒரு ஐந்து திரைப்படங்களில்தான் நடித்திருந்தார்.

இயக்குனருடன் பழக்கம்:

அந்த திரைப்படங்களிலும் பெரிய கதாபாத்திரம் என்று எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரான ரவிகாந்திற்கு வெங்கட் பிரபு இயக்குனர் ஆன பிறகு நிறைய வாய்ப்புகளை கொடுக்க தொடங்கினார்.

வெங்கட் பிரபு அவர் இயக்கிய சரோஜா திரைப்படத்திலேயே ரவிகாந்திற்கு வாய்ப்புகள் கொடுத்திருந்தார். கோவா திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து மங்காத்தா பிரியாணி மாநாடு என்று வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ரவிகாந்த் ஒரு சின்ன கதாபாத்திரத்திலாவது நடித்துக் கொண்டிருந்தார்.

11 கதாபாத்திரங்கள்:

அவருடைய சொந்த வாழ்க்கையை பொருத்தவரை நடிகை அம்பிகாவை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரவிகாந்த். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக இல்லை. இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்த அந்த வாழ்க்கை பிறகு பிரிவை கண்டது.

2002 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் இந்த நிலையில் கோவா திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது முதலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கதான் என்னை அழைத்து இருந்தார் வெங்கட் பிரபு.

ஆனால் படப்பிடிப்பு செல்லும் போது வரிசையாக வேறு வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். ஒரு ஐயர் கதாபாத்திரத்தில் துவங்கி மொத்தமாக 11 கதாபாத்திரங்களில் அந்த திரைப்படத்தில் நடித்தேன். அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை அதில் ஒரு பெண் கதாபாத்திரமும் அடக்கம் என்று கூறியிருக்கிறார் ரவி காந்த்.