இந்த ஆட்சியில யாரும் படம் எடுக்க முடியாது.. மாடு மேய்க்க சென்ற முன்னணி தயாரிப்பாளர்..!

இந்திய சினிமாவிலேயே அதிகமாக திரைப்படங்கள் வெளியாகும் சினிமா துறைகளில் தமிழ் சினிமா துறையின் முக்கியமான ஒரு துறையாக இருக்கிறது. வருடத்திற்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவதாக கூறப்படுகிறது.

நிறைய சின்ன இயக்குனர்கள் தமிழில் திரைப்படங்கள் எடுப்பதற்கு வருகின்றனர். குறைந்த பட்ஜெட் திரைப்படங்களும் அதிகமாக உருவாகின்றன. அதனால் தமிழில் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகின்றன.

ஆனால் அவற்றில் மக்கள் மத்தியில் பிரபலமாவதும் நல்ல வெற்றியை கொடுப்பதும் ஒரு சில திரைப்படங்களாக மட்டும்தான் இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது கிடைப்பதில்லை.

லோ பட்ஜெட் படங்கள்:

அதற்கு முக்கிய காரணம் பெரும் நட்சத்திரங்கள் யாரும் அதில் நடிப்பதில்லை என்பதும் ஆகும். அதே சமயம் ஒரு சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் மக்கள் பேசப்படும் திரைப்படங்களாக அமைகின்றன.

உதாரணத்திற்கு இந்த வருடம் வெளியான ஸ்டார் போன வருடம் வெளியான பார்க்கிங் மாதிரியான திரைப்படங்களை கூறலாம். ஆனால் ஐம்பது திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் வெளியானால் அவற்றில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்தான் இப்படியாக பேசப்படும் படங்களாக அமைகின்றன.

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் கூட அரண்மனை, மகாராஜா, கருடன் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள்தான் வெற்றி கொடுத்தன. அந்த திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்கள்தான்.

இயக்குனரின் சர்ச்சை கருத்து:

மற்றவை எல்லாம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இந்த வருடம் மட்டும் இதுவரை 100க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இருந்தாலும் 10 படங்கள் கூட குறிப்பிட்டு சொல்லும் சொல்லும் படியான வெற்றியை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தை இயக்கிய ஆதம் பாவா சமீபத்தில் சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். திமுக ஆட்சியில் திரைப்படங்கள் தயாரிப்பதை விட மாடு மேய்க்க போகலாம் என்று கூறி மாடுகளுடன் சேர்ந்து செல்பி எடுத்து அதை பகிர்ந்து இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் நடித்த ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். தற்சமயம் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு உண்டு அதை குறிப்பிடும் விதமாகதான் இப்படி இவர் பதிவிட்டிருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.