அந்த ஒரு விஷயம் வாழ்கையை மாத்திடுச்சு..  குஷ்பூ சொன்ன 30 வருஷ ரகசியம்..!

1980, 1990களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ. தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானார் குஷ்பூ.

வட இந்தியாவில் இருந்து வந்த நடிகை என்றாலும் கூட அவருக்கு முதல் திரைப்படத்தில் இருந்து அதிகமான வரவேற்புகள் இங்கு இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான கார்த்தி, ரஜினி, கமல்ஹாசன் என்று இப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். அரசியலின் மீது ஈடுபாடு வந்த காரணத்தினால் திருமணத்திற்கு பிறகு அரசியலில் களமிறங்கினார் குஷ்பூ.

அரசியலில் ஈடுபாடு:

அதனை தொடர்ந்து தற்சமயம் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடுவது குஷ்புவின் வழக்கம். மேலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்களில் அவ்வப்போது குஷ்பூவை பார்க்க முடியும் மற்றபடி தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று பெரிதாக இவர் நடிப்பதே கிடையாது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது தமிழில் எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது அப்பாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அம்மா சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.

அப்பொழுது தமிழை கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. அப்பொழுது பிரபுதான் எனக்கு அதிகமாக உதவி செய்தார். நீ பார்க்கும் நபர்களிடமெல்லாம் தமிழில் பேசு. தவறாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர் கூறினார்.

தமிழ் கற்றுக்கொண்ட குஷ்பூ:

நானும் அவ்வாறு பேசினேன் அதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் பேச கற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகு தமிழில் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று பிரபு கூறினார். அதனை தொடர்ந்து தினத்தந்தி மாதிரியான செய்தித்தாள்களை வாங்கி படித்து தமிழில் எழுத படிக்கவும் கற்றுக் கொண்டேன் என்கிறார் குஷ்பூ.

அதே போல ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் இவர் நடித்த பொழுது பெண்களுக்கு கேரவன் வசதி எல்லாம் செய்து கொடுப்பது கிடையாது. அப்பொழுது எல்லாம் பெண்கள் ஏதாவது ஒரு மரத்தின் மறைவிலோ அல்லது காரின் பின்னால் நின்றோதான் உடைகளை மாற்றி வருவார்கள்.

குஷ்பூவை பொருத்தவரை அவருக்கு உடை மாற்றுவதற்கு நான்கு ஆண்களை கூட அனுப்புவார்கள். அவர்கள் நான்கு பெரும் முகத்தை திருப்பி கொண்டு புடவையை சுற்றி பிடித்துக் கொள்வார்கள். அதற்குள் நின்றுதான் குஷ்பூ உடையை மாற்ற வேண்டும்.

ஆனால் அப்பொழுது கூட எனக்கு அவர்கள் மீது பயம் இருந்தது கிடையாது ஆனால் இப்பொழுது சமூக வலைதளங்களின் வளர்ச்சி பயத்தை கொடுக்கிறது என்கிறார் குஷ்பூ .அவ்வளவு கஷ்டத்திலும் பல திரைப்படங்களில் குஷ்பூ நடித்திருக்கிறார். இந்த ஓய்வில்லாத டெடிகேஷன் தான் குஷ்புவை இத்தனை வருடங்கள் சினிமாவில் பிரபலமாக இருக்க வைத்துள்ளது.