ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. பாத்ரூமில் அரைகுறை ஆடையில் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

பயங்கரமாக நடனமாடி அதன் மூலமாகவே இளைஞர்கள் மத்தியில் நெருப்பை பற்ற வைக்க கூடியவர் நடிகை ஸ்ரீ லீலா. சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீ லீலா நடிப்பை விடவும் நடனத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

அதனால் நிறைய நடன கலைஞர்களிடம் சென்று சிறப்பாக நடனத்தை கற்றுக் கொண்டார். இதனால் அவருக்கு எளிதாக வளைவு நெளிவு கொண்ட நடனங்கள் எல்லாம் ஆடுவதற்கு வருகின்றன. இதனால் அவருடன் நடிக்கும் நடிகர்களே கூட ஸ்ரீலிலாவுடன் சேர்ந்து ஆடுவதற்கு திணறி வருகின்றனர்.

சித்ராங்கடா என்கிற திரைப்படத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீ லீலா. நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

நடனத்தில் மாஸ்டர்:

அதனை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது நடனத்தை மட்டும் அப்டேட் செய்து கொண்டே இருந்தார் ஸ்ரீ லீலா. தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

இவர் கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார் சமீபத்தில் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் எப்படி நடிகர் விஜய் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவராக இருக்கிறாரோ அதே போல மகேஷ்பாபுவும் தெலுங்கில் நன்றாகவே நடனம் ஆடக்கூடிய நபராவார்.

ஆனால் குண்டூர்காரம் திரைப்படத்தில் வரும் பாடல்களில் அவரால் கூட ஸ்ரீ லீலாவுக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு நடனத்தில் பயிற்சி பெற்று இருக்கிறார் ஸ்ரீ லீலா. அந்த திரைப்படத்திலேயே ஸ்ரீ லீலாவின் நடனத்தை பாராட்டி பேசி இருப்பார் நடிகர் மகேஷ்பாபு.

தமிழில் வாய்ப்பு:

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வருகிறார் இதற்கு நடுவே ஒரு சில திரைப்படங்களில் நடித்ததற்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஸ்ரீ லீலா. தமிழில் இவர் நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீ லீலாவிடம் கேட்டு வருகின்றனர். இதற்கு நடுவே டார்லிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து ஸ்ரீ லீலா நடித்து வருகிறார்.

ஸ்ரீ லீலாவின் நடனத்தை வைத்து திரைப்படத்தை ஓட்டிவிட முடியும் என்னும் காரணத்தினாலேயே அவருக்கு மார்க்கெட் அதிகரித்து வருகிறது பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாக்கப்பட்டு வருகிறது அந்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகின்றனர் எப்படித்தான் இவ்வளவு அழகாக இருக்கிறாரோ என்று கூறி இந்த புகைப்படங்களை உச்சி கொட்டி வருகின்றனர் ரசிகர்கள்.