நீ நல்லாவே இருக்க மாட்டடா..சூரியாவுக்கு சாபம் விட்ட நடிகர் கார்த்தி..! என்ன ஆனது..?

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் மிக தாமதமாக கதாநாயகனாக நடிக்க வந்தவர் நடிகர் கார்த்தி. பொதுவாக 20 வயதுகளிலேயே பெரும்பான்மையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு வந்து விடுவார்கள்.

ஆனால் கார்த்தியை பொருத்தவரை 27 வயதில்தான் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் கார்த்தி.

அதற்குப் பிறகு கதாநாயகனாக அவர் நடித்த முதல் திரைப்படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் கார்த்தி. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கின.

தொடர் வெற்றி:

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல என்று கார்த்தி நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இப்போது வரை சினிமாவில் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் கார்த்தி.

மேலும் கார்த்தி இதுவரை நடித்த திரைப்படங்களில் அதிக திரைப்படங்கள் வெற்றியைதான் கொடுத்திருக்கின்றன. சூர்யாவை விட கார்த்தி திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜப்பான் திரைப்படம் அவரது 25வது திரைப்படம் ஆகும்.

தமிழ் சினிமாவில் பொதுவாகவே 25வது திரைப்படம் 50-வது திரைப்படம் எல்லாம் பெரும் வெற்றியை கொடுப்பது கிடையாது. அந்த வகையில் நடிகர் கார்த்திக்கு ஜப்பான் திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

தொடர்ந்து மெய்யழகன், வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. சூர்யாவிற்கு பிறகு வெகு தாமதமாக வந்தாலும் கூட தற்சமயம் சூர்யாவை விட பெரிய மார்க்கெட் ஒன்றை பிடித்திருக்கிறார் கார்த்தி.

25 ஆவது படம்:

இதனாலையே கார்த்தி 25வது திரைப்படம் வெளியான பொழுது அதற்கு ஒரு பெரிய விழா எடுத்து நடத்தப்பட்டது. அதில் கடந்த 25 திரைப்படங்களில் முக்கியமாக நடித்த பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தன்னுடைய குழந்தை கால அனுபவம் குறித்து பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் கார்த்தி கூறும் பொழுது பள்ளி காலங்களில் சூர்யா எனக்கு நிறைய தொந்தரவு கொடுப்பார். பள்ளியில் நான் அதிக மதிப்பெண் பெற்றதற்காக எனது மாமா எனக்கு பைக் வாங்கி கொடுத்தார். பிறகு நான் காலேஜ் செல்லும் பொழுது அந்த பைக்கில் செல்ல முடியாத அளவிற்கு தூரமாக காலேஜ் இருந்தது.

எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் சூர்யா பைக்கை வைத்துக் கொள்வார் இரண்டு நாட்கள்தான் நான் வைத்துக் கொள்வேன். இதற்காக அதிகாலையிலேயே எழுந்து பைக்கை முழுதாக கழுவி சுத்தம் செய்து வைத்து விடுவேன்.

ஆனால் நான் குளித்துவிட்டு வருவதற்குள் சூர்யா அந்த பைக்கை எடுத்து சென்று விடுவார் அப்போதெல்லாம் சூர்யாவை நேரடியாகவே நான் சபித்திருக்கிறேன். நீ நல்லாவே இருக்க மாட்ட என்று எல்லாம் திட்டி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.