கட்சி சேர பாடல் படப்பிடிப்பு செலவு எவ்வளவு..! பாடகர் Sai Abhyankkar ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதற்கு பல்வேறு வழிமுறைகளை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமாவில் எளிதாக வரவேற்பு கிடைத்துவிடும் என்பதால் நடிகைகள் அந்த வழிமுறையை பின்பற்றுகின்றனர்.

மாடலிங் துறையில் இருந்து கொண்டு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அவர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுகின்றனர். ஆனால் நடிகர்களை பொருத்தவரை அதிகபட்சம் சின்னத்திரை அல்லது நடிப்பு பயிற்சி பட்டறைகளைதான் தேர்ந்தெடுக்கின்றனர்.

சின்னதிரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. ஆனால் அவர்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாகி விடுவதால் எளிதாக சினிமாவிற்கு வந்து விடலாம் என நினைக்கின்றனர்.

நடிகர்கள் வாய்ப்பு:

அரிதாக நடிகர் சிவகார்த்திகேயன் கவின் போன்ற நடிகர்கள் அப்படித்தான் சினிமாவிற்குள் வந்தனர். இன்னும் சிலர் அரிதாக தங்களது திறமைகளை வெளிபடுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர். அதன் மூலமாக அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது.

எப்படி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாவது என்பதுதான் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக முக்கிய காரணமாக இருக்கிறது அதனால் தான் டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து மாதிரியான ஆட்கள் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் வேறு யாரும் பாடல்கள் பாடி அதன் மூலம் பிரபலமாகி சினிமாவிற்குள் வரவில்லை.

பெரும்பாலும் ஆல்பம் பாடல்கள் பாடும் பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது கிடையாது. ஆல்பம் பாடல்கள் பாடியவர்கள் உண்டு. ஆனால் சுந்தர் சியின் உதவியால் ஹிப் ஹாப் ஆதிக்கு மட்டும் தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் கிடைத்தது.

பாடகர்களுக்கு கிடைக்கும் பிரபலம்:

இந்த நிலையில் சமீபத்தில் ”கட்சி சேர” என்கிற ஒரு ஆல்பம் பாடல் தமிழ் சினிமா பாடல்களை விடவும் பெரும் வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான வீவ்களை பெற்ற இந்த பாடல் பெரும் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அந்த சமயத்தில் அந்த பாடலை பாடிய பாடகர் சாய் அபியங்கரை பல யூட்யூப் சேனல்கள் பேட்டி எடுத்து வந்தன. அந்த பாடலில் ஆடிய நடிகையையும் பலரும் பேட்டி எடுத்து வந்தனர். இந்த நிலையில் எத்தனை கோடி செலவில் இந்த பாடல் உருவானது என்பது அப்பொழுது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது.

இந்த கேள்வியை பாடகர் சாய் அபியங்கரிடமே கேட்டனர். அதற்கு பதிலளிக்க சாய் 10 கோடி ரூபாய் கையில் இருந்தால் ஒரு நல்ல திரைப்படத்தையே இயக்கி விட முடியும் நாங்கள் அவ்வளவெல்லாம் செலவு செய்யவில்லை.

சொல்லப்போனால் கோடிகளிலேயே இந்த படத்திற்கு செலவாகவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் இந்த ஆல்பம் பாடலை முடிக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அதற்குள் என்ன செய்ய முடியுமோ அவற்றை செய்து அந்த ஆல்பம் பாடலை தயாரித்திருந்தோம் என்று கூறியிருக்கிறார்