வீரப்பனை வெளில கொண்டு வர்ற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. இளையராஜாவுக்கு வந்த டாஸ்க்!.. இப்படியும் நடந்துச்சா?.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு என்று தனிப்பட்ட மரியாதை இருந்தது. எப்போது தமிழ் சினிமாவில் ஊமை விழிகள் என்கிற திரைப்படம் வந்ததோ அது முதலே படித்து வந்த மாணவர்களுக்கு தொடர்ந்து விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் அவர்களது திரைப்படங்களை தயாரிக்க முன்வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர்.கே செல்வமணி. அவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை விஜயகாந்த்தை வைத்துதான் இயக்கினார் ஆர்.கே செல்வமணி.

விஜயகாந்துக்கு வெற்றி படம்:

முதல் திரைப்படமான புலன் விசாரணை தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்தது. 100 நாட்களை தாண்டி வெற்றியை கொடுத்த அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் ஆர்.கே செல்வமணிக்கு வாய்ப்புகளை கொடுக்க துவங்கினார்.

மீண்டும் ஆர்.கே செல்வமணி விஜயகாந்த்தை வைத்து இயக்கிய திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்த திரைப்படம் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் ஆகும். அப்போது மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது கேப்டன் பிரபாகரன்.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் நூறாவது திரைப்படம் என்பது பெரும் நடிகர்களுக்கே வெற்றி படமாக அமைந்தது கிடையாது. ஆனால் விஜயகாந்த்திற்கு மட்டும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் சிறப்பான வெற்றி படமாக அமைந்தது.

பாடலுக்கு பின்னால் உள்ள கதை:

ஆனால் புலன் விசாரணை திரைப்படத்திலும் சரி கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திலும் சரி அதிகமான பாடல்கள் என்பது இருக்காது. இது குறித்து ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் அவர் கூறும்பொழுது இதற்காக இளையராஜா என்னிடம் கோபித்துக் கொண்டார்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு இசையமைக்க சென்ற பொழுது இனி பாடல்கள் அதிகம் இல்லாத படமாக இருந்தால் இசையமைக்க என்னிடம் வராதே என்று கோபமாக கூறிவிட்டார். மேலும் அந்த படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா பாடல் குறித்து கூறும் பொழுது ஷோலே திரைப்படத்தில் வரும் மெகபூபா பாடல் மாதிரியே ஒரு பாடல் வேணும் படத்தின் கதைப்படி வீரப்பனை வெளியில் கொண்டுவர வைக்கும் அளவிற்கு அந்த பாடல் இருக்க வேண்டும் என்று நான் இளையராஜாவிடம் கூறினேன்.

மற்றபடி அந்த படத்தின் பாடல் வரிகளிலோ, வேறு எதிலுமே நான் பணிபுரியவில்லை இப்படி ஒரு பாடல் மட்டும் தான் வேண்டும் என்று நான் இளையராஜாவிடம் கூறினேன். ஆனால் அந்த இடத்திற்கு பொருத்தமான ஒரு பாடலை இளையராஜா இசை அமைத்துக் கொடுத்தார் என்று கூறியிருந்தார் ஆர்.கே செல்வமணி. அப்பொழுது வீரப்பனுடன் நடந்த பிரச்சனைகளை மையமாக கொண்டுதான் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் ஆர்.கே செல்வமணி.