என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் படங்களாக இருப்பதால் இப்போது வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவிலேயே கருப்பு வெள்ளை கால கட்டங்களில் துவங்கி அனைத்து தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரு நடிகராக ரஜினி மட்டும்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சர்ச்சையான நடிகர்:

ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட நடிகராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்திருக்கிறார். நிறைய தகராறுகளில் அப்பொழுதெல்லாம் ரஜினியின் பெயர் அடிப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கபாலி திரைப்படத்தின் பொழுது நடந்த நிகழ்வு ஒன்றை அந்த படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ராமலிங்கம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கபாலி திரைப்படம் ரஜினிக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

கபாலி திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கினார். கபாலி திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு பெரும் தோல்வியை கொடுத்த திரைப்படங்களாக இருந்தது.

பா.ரஞ்சித் திரைப்படம்:

அதனை தொடர்ந்து ரஜினிக்கு முக்கியமான திரைப்படமாக கபாலி திரைப்படம் அமைந்தது. அப்போதுதான் இயக்குனர் பா.ரஞ்சித் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு வந்திருந்தார் என்றாலும் கூட ரஜினி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து கபாலி திரைப்படத்தில் நடித்தார்.

கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அப்பொழுது அங்கு நடந்த பிரச்சனை ஒன்றையும் அதனை ரஜினிகாந்த் எப்படி தீர்த்து வைத்தார் என்பது குறித்தும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் இயக்குனர் ராமலிங்கம்.

அந்த பேட்டியில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு காட்சியில் மலேசியா ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்பொழுது மலேசியாவில் பெரிய ஆளாக இருக்கும் ஒருவர் எங்களிடம் வந்து ரஜினியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் இந்தியாவுக்கே திரும்பி போக முடியாது என்று பட குழுவையே மிரட்டி வந்தார்.

இந்த விஷயம் ரஜினியின் காதுக்கு சென்றது உடனே ரஜினி அங்கு வந்து விஷயத்தை கேட்டுவிட்டு நாங்கள் இந்தியா போக முடியாதா நீ இந்த ஊரிலேயே இருக்க மாட்ட.. என்று சொல்லிவிட்டு மலேசியாவில் இருந்த மிகப்பெரிய ஒரு நபரின் பெயரை கூறினார். அதனை கேட்டு அங்கேயே பயந்து போன அந்த நபர் ரஜினியிடம் சரண்டர் ஆகி விட்டார். அதை பார்க்கும் பொழுது பாட்ஷா படத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ராமலிங்கம்.