ஸ்கூல் டீச்சர் புடவையை பிடித்து.. பள்ளி பருவத்திலேயே இயக்குனர் அமீர் செய்த சம்பவம்!..

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அவர் முன்பு பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அமீர் பாலாவின் முதல் படமான சேது திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்து வந்தார்.

அதற்குப் பிறகு அவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் அவர் பாலாவிடம் இருந்து பிரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே திரைப்படம். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இயக்குனர் அமீர்

அந்த வரவேற்பை தொடர்ந்து அமீர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வகையில் இயக்கிய திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகும் ராம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களை அமீர் இயக்கி வந்தார்.

இதற்கு நடுவே அமீருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அமீருக்கு வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்கிற அவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

பள்ளி பருவத்தில் செய்த சம்பவம்

இந்த படம் வெளியான பிறகு படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷை விடவும் ராஜன் கதாபாத்திரத்திற்குதான் வரவேற்புகள் அதிகமாக இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இந்த நிலையில் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வாழை திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதில் கூறும் பொழுது வாழை திரைப்படத்தில் டீச்சரை காதலிக்கும் ஒரு மாணவன் கதாபாத்திரம் இருக்கும்.

ஸ்கூல் டீச்சர் புடவையை பிடித்து

அதனை பார்த்த அமீர் இது தனக்கு பால்ய நினைவுகளை ஏற்படுத்துவதாக கூறி அந்த நினைவுகளை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பள்ளி படிக்கும் காலங்களில் நானும் ஒரு டீச்சரை காதலித்து வந்தேன். அந்த டீச்சர் செல்லும்போதெல்லாம் அவரது புடவையை நான் முகர்ந்து பார்ப்பேன்.

இதை ஒருநாள் பார்த்து விட்ட இன்னொரு டீச்சர் அதை அந்த டீச்சரிடம் கூறிவிட்டார் இதனால் அவர்கள் என்னை முட்டி போட வைத்து விட்டனர். ஆனால் அப்பொழுதும் கூட நான் அந்த டீச்சரைதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த டீச்சர் மீது வரும் காதல் எல்லாம் அழகை பார்த்து வருவது கிடையாது அவர்கள் நம் மீது செலுத்தும் அணுகுமுறையை வைத்து தான் வருகிறது என்று கூறியிருந்தார் அமீர்.