சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக கொடியின் போர் யானைகள்!!.. பழ கருப்பையா பரபரப்பு பேச்சு..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் நேற்று தனது கட்சி கொடியினை வெளியிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கக்கூடிய முக்கிய வேலைகளை அடுத்தடுத்து செய்து வருகிறார்.

தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து மேலும் ஒரு படத்தில் நடித்து திரை உலகிற்கு பை, பை சொல்லிவிட்டு மக்கள் பணியாற்ற வர இருக்கிறார்.

சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக..

தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை வெளியிட்டு உறுதிமொழியும் கொடி பாட்டையும் வெளியிட்டதை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் விழுந்தது.

அது மட்டுமல்லாமல் இந்த கொடியில் யானைகள் இருப்பதை அடுத்து தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் இந்த கொடியில் இடம் பெற்றிருக்கும் யானையை அகற்ற வேண்டி போராட்டங்களை நடத்தும் என்பது போன்ற விஷயங்கள் கசிந்தது.

மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த கொடி முடக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகுவதற்கும் வாய்ப்பு இருந்ததாக அரசியல் நிபுணர்கள் பல கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

 

இந்நிலையில் விஜயின் கட்சி பற்றியும் விஜயின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் என்னென்ன நடக்கும் என்பதை பழ. கருப்பையா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் சீமான் கட்சியை எடுத்து விழுங்க கூடிய நிலைக்கு விஜய் வளர்ச்சி அடைந்தாலும் அடையலாம். அதனால் தான் சீமான் 2017 தனது கட கதவுகளை திறந்து இருந்து தம்பி என்ன சொல்கிறாரோ அதுபோல செய்யலாம் என்று இறங்கி வந்திருக்கிறார் என்ற கருத்தை சொன்னார்.

அத்தோடு தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுகவிற்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை விஜய் கொடுக்க முடியும் அதில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படும் என்பது போன்ற விஷயங்களை பகிர்ந்தார்.

பழ. கருப்பையாவின் பரபரப்பு பேச்சு..

விஜய் உடைய டார்கெட் திமுகவாகத்தான் இருக்கும் இனி தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் ட்விஸ்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் தவெக கொடியால் கண்டிப்பாக சில மாற்றங்கள் ஏற்படும்.

எம்ஜிஆரும் இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் தனது அரசியல் நகர்வுகளை சிறப்பாக செய்து தமிழகத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்தவர். அது போல விஜய்க்கு எப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் அதை தவிடு பொடியாக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

15 சதவீதமான வாக்குகள் இவருக்கு கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் இவர் அமைக்கும் கூட்டணியின் மூலமாகவோ அல்லது எதிர்வரும் காலங்களில் இவர் பணியாற்றிடும் விதத்தைப் பார்த்து அந்த ஓட்டுக்களின் விகிதம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதால் தற்போது அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

எனவே தமிழகத்தின் ஆட்சி அதிகாரங்களை தொட்டுப் பார்க்கக் கூடிய அளவு விஜயின் வளர்ச்சி திமுக விற்கும் சில நெருக்கடிகளை கொடுக்கக்கூடிய வகையில் இருக்கும் அதற்காகத்தான் அவர் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார் என்பது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.