SPB-யே இனி வேண்டாம் எனக்கு மலேசியா வாசுதேவன் போதும் – இளையராஜா செய்த சின்னத்தன சம்பவம்!..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் இளையராஜாவிற்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கக்கூடிய இவர் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் சமீப காலமாக எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இளையராஜாவின் இசையில் அதிகளவு பாடல்களை பாடிய எஸ் பி பாலசுப்பிரமணியத்தை ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த இளையராஜா பற்றியும் அவர் அப்படி செய்ததை அடுத்து எந்த பாடகரை அறிமுகப்படுத்தி தனது இசையில் பாட வைத்தார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

SPB வேண்டாம் மலேசியா வாசுதேவன் போதும்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் அதிக அளவு பாடல்களை பாடிய பின்னனி பாடல்களில் ஒருவராக திகழும் எஸ்பி பாலசுப்பிரமணியம் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இன்றளவும் இவரது பாடல் இளம் தலைமுறையினரால் விருப்பத்தோடு கேட்கப்படுகின்றது. மேலும் மிகச் சிறப்பான குரல் வளம் கொண்ட இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் அதிக அளவு பாடல்களை பாடி பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

ஆரம்ப காலத்தில் இளையராஜா இவருக்கு தனது இசையில் பாட பல்வேறு வாய்ப்புகளை கொடுத்து இருந்தாலும் மலேசியாவில் தமிழ் குழுவில் பாடகராக இருந்த மலேசியா வாசுதேவனுக்கு எப்படி பின்னணி பாடகர் ஆகக்கூடிய வாய்ப்பை கொடுத்தார் தெரியுமா.

இவர் மலேசியாவில் பல குழுக்களில் பாடி உள்ளதோடு மேடை நாடகங்களில் நடித்து வந்த வாசுதேவன் அவர்கள் சென்னை வந்ததும் இளையராஜாவின் குழுவில் இணைந்து மேடை பாடகராக அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து தான் வாசுதேவனின் பெயரில் மலேசியா என்று அவரது ஊரை இணைத்து அடை மொழியாக்கி மலேசியா வாசுதேவன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

இளையராஜா செய்த சின்னத்தன சம்பவம்..

இந்நிலையில் முரட்டு காளை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஓப்பன் சாங்காக பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பாடி ரசிகர்களின் மத்தியில் ரிலீசான மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி சொன்னால் நீங்கள் அசந்து போவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிக்கு தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியவர் மலேசியா வாசுதேவன். இதனை அடுத்து நடிப்பில் ஆர்வம் கொண்டு இருந்த காரணத்தினால் இவர் 1977-களில் திரை உலகில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

எனினும் 1985-இல் வெளிவந்த ஒரு கைதியின் டைரியில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து இவர் 1980-களில் சாமந்திப்பூ, பாக்கு வெற்றிலை, ஆயிரம் கைகள் என ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

இதனை அடுத்து குழுவில் பாடி வந்த இவர் எப்படி பின்னணி பாடகராக மாறினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?. இளையராஜாவின் இசையில் எஸ்பிபி ஒரு பாடல் பாட வேண்டி இருந்த சூழ்நிலையில் ஸ்டுடியோவிற்கு வர சற்று கால தாமதமாக வந்திருக்கிறார்.

இதனை அடுத்து பாட்டை ஒரு முறை பாடி காட்டு என்று இளையராஜா எஸ்பிபி இடம் சொல்ல எஸ்பிபிக்கு தொண்டை கட்டி இருந்ததால் குரல் சரியாக வரவில்லை. அதனால் மலேசியா வாசுதேவனை இளையராஜா பாட வைத்தார்.

அந்த பாடல் 16 வயதினிலே படத்தில் வெளி வந்த ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் தான். இந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் பரவியதை அடுத்து இவரும் பெரிய பாடகராக மாறிவிட்டார்.

இதனை அடுத்து தற்போது இணையம் எங்கும் எஸ்பிபி வேண்டாம் என்று சொல்லி மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பை வழங்கி வாழ வைத்த இளையராஜாவை பற்றி தற்போது இணையம் எங்கும் பேசி பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.