ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!

நடிகர் விஜய் தமிழ வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் குதித்துள்ளார்.

விஜய் கட்சிக்கொடி ஆரம்பித்த உடனேயே அவருடைய கொடியை பார்த்து எதிரிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது.

நடிகர் விஜய் அரசியல் பயணம்:

அதனால் தான். அந்த கொடியை மீம்ஸ் போட்டு விமர்சித்த ட்ரோல் செய்து இருந்தனர். நீங்கள் ஒரு நபரின் செயலையோ, ஒரு நபரையோ எந்த அளவுக்கு விமர்சித்து கிண்டல் அடிக்கிறீர்களோ அந்த நபர் அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறார் என்பது அர்த்தம்.

இந்த கொடி தயாரிக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? எத்தனை யோசனைகள் செய்திருப்பார்? எத்தனை திருத்தங்கள் செய்திருப்பார்? எத்தனை பேர் அதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்?

அந்த கொடியில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்ற யோசனைகள் எவ்வளவு இருந்திருக்கும்.

ஆனால் இது எல்லாம் யோசிக்காமல் விமர்சிப்பவர்கள் மிக சுலபமாக விமர்சித்து தள்ளி விடுகிறார்கள்.

அந்த கட்சி கொடிக்கு வந்த விமர்சனங்களை பார்த்தால் எதிரிகளின் பொறாமை தான் வெளிப்படுகிறது என செய்யாறு பாலு பேட்டியில் கூறியிருக்கிறார்.

கட்சி கொடியை கலாய்த்த விஷமிகள்:

ஏழை மீறி விமர்சித்துள்ள சில நெட்டிசன்ஸ் Fevicol’லில் உள்ள இரண்டு யானைகள் மற்றும் முத்தூட் பைனான்ஸில் இருக்கும் இரண்டு யானை லோகோ உள்ளிட்டவற்றை எடுத்து பங்கமாக TVK கட்சியின் கொடியை கலாய்த்து தள்ளினார்கள்.

மேலும் சிலர் ஒரு வேலை தமிழக வெற்றி கழகம் இங்கு போனியாகவில்லை என்றால் கேரளாவுக்கு போய் கேரள வெற்றி கழகம் என பெயரையும் மாற்றி வைத்துக் கொண்டு இந்த யானைகளோடு பிளறிக்கொண்டு சண்டை போடுவார் விஜய் என்றெல்லாம் ட்ரோல் செய்து தள்ளினார்கள்.

உண்மையை சொல்லப்போனால் தமிழ்நாட்டை காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகவே விஜய்க்கு கேரளா ரசிகர்கள் இருக்கிறார்கள் .

எனவே அவரை ட்ரோல் செய்பவர்களுக்கு அதுவே ஒரு மிகப்பெரிய பதிலடி. விஜய் அரசியலுக்கு வர மாட்டார்.

அப்படியே வந்தாலும் அவருக்கு இதெல்லாம் வேலைக்காகாது என பலர் விமர்சித்த சமயத்தில் திடீரென கட்சிக்குள் இறங்கி நீயா நானா? என அடித்து காட்டி விடலாம் வா என களத்தில் இறங்கி இருக்கிறார்.

பொங்கிய எதிரிகள்:

எனவே விஜய்க்கு மிகப்பெரிய தில் தான் இந்த விஷயத்தில் இருக்கிறது. முதலில் விஜய் உள்ள வரவே மாட்டார் என்று சொன்னீங்க அப்புறம் ட்விட்டரில் கட்சியை பெயரை அறிவித்து விட்டார் என்று சொன்னீங்க.

தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகும் விஜய் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிப்பார் காரணம் ரூ. 250 கோடிக்கு சம்பளம் வாங்குகிறார் அது நிச்சயம் அவர் தவிர்க்க மாட்டார் என கூறி விமர்சித்தார்கள் .

இப்படியாக ஆரம்பத்தில் இருந்து விஜய்யின் அரசியல் பயணத்தை பலரும் விமர்சித்து தள்ளினார்கள்..

தற்போது அதையெல்லாம் தாண்டி அவர் அரசியல் களத்தில் தைரியமாக உள்ளே வந்த பிறகு கட்சி கொடியை கலாய்ப்பது அவருடைய கட்சியை கலாய்ப்பது.. அவருடைய உறுதி மொழியை கலாய்ப்பதுமாக இருந்து வருகிறார்கள்.

இதை பார்த்தாலே தெரிகிறது கொடி அறிமுகம் செய்யும்போதே எதிரிகளுக்கு இவ்வளவு நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறதா?என்பது இதனால் ரசிகர்கள் பொங்கி எழுந்து விஜய்க்கு மேலும் ஆராவதாரத்தையும் ஆதரவுகளையும் கொடுக்க துவங்கியிருக்கிறார்கள்.