பி**டு படம் நடிச்ச நடிகைக்கு வாய்ப்பு கிடையாது.. மாதவன் படத்தில் வாய்ப்பை இழந்த சங்கீதா!..

1997 முதல் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளத்தில் கங்கோத்ரி என்கிற ஒரு திரைப்படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார் சங்கீதா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது.

1997க்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. காதலே நிம்மதி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் சங்கீதா.

நடிகை சங்கீதா:

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் நிறைய வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வந்தார் சங்கீதா. சில படங்களில் அதிக கவர்ச்சி காட்டியும் இவர் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்களிலேயே பிதாமகன் திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். அதில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கோமதி என்கிற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.

வாய்ப்பு கிடையாது

அந்த நடிப்பின் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின பிறகு சிம்பு நடித்த காளை திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இப்படியாக தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்த பொழுதும் கூட அவருக்கு மாதவன் நடித்த ரன் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அந்த நிகழ்வை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் சங்கீதா. அதில் அவர் கூறும் பொழுது நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால் மாதவனுக்கு என்னை ஏற்கனவே தெரிந்திருந்தது. அதேபோல அந்த படத்தின் சினி மோட்டோகிராப்பருக்கும் என்னை தெரிந்திருந்தது.

வாய்ப்பை இழந்த சங்கீதா

எனவே அந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக அவர்கள் ஏற்கனவே என்னிடம் பேசினார்கள். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். ஆனால் ஒரு சில தினங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் எனக்கு போன் செய்தார்கள். போன் செய்து சில படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அதில் நடித்தது நீங்கள் தானா என்று கேட்டார்கள்.

நானும் ஆம் நான்தான் என்று கூறினேன். அந்த சமயங்களில் நான் கொஞ்சம் அதிக கவர்ச்சி உடைய பி கிரேடு திரைப்படங்களில் நடித்திருந்தேன். அவற்றைதான் அவர்கள் பார்த்திருந்தார்கள். பிறகு  அவர்கள் ஐயையோ அப்படினா நம்மளுக்கு அது கொஞ்சம் பிரச்சனையாகிடும்.

நம்ம படத்துக்கு இதனால் வேல்யூ குறைந்து விடும் என்று கூறினார்கள் அதற்குப் பிறகு புரொடக்ஷனில் இருந்தும் யாரோ பேசினார்கள் பிறகு சரி ஓகே என்று நானும் அதை விட்டுவிட்டேன் என்று கூறி இருக்கிறார் சங்கீதா.