சாகப்போறோம்னு முன்னாடியே தெரிஞ்சு அதை பண்ணுனாரு.. ஜெமினி கணேசன் கடைசி படத்தில் செஞ்ச விஷயம்!.

சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முதலே காதல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழில் அதிக புகழ்பெற்ற ஒரு நடிகராக ஜெமினி கணேசன் இருந்து வந்தார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் சினிமாவில் இந்த அளவிற்கு போட்டி என்பது இருக்கவில்லை. அதனால் பெரிய நடிகர்கள் மிக எளிதாகவே சேர்ந்து நடிப்பதை பார்க்க முடியும்.

ஜெமினி கணேசன்

அப்போதே சேர்ந்து நடிக்காத நடிகர்கள் என்றால் அது சிவாஜியும் எம்.ஜி.ஆரும் மட்டும்தான், மற்ற நடிகர்களை பொருத்தவரை அப்படி இல்லாமல் சேர்ந்து நடிப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் பாசமலர் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு சேர்ந்து நடித்திருக்கிறார்.

அந்த நேரங்களில் எல்லாம் சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதனை சமபடுத்தும் அளவிற்கு ஜெமினி கணேசனின் நடிப்பும் இருக்கும். ஏனெனில் சிவாஜியோடு நடிக்கும் போது மட்டும் மிக முக்கியமாக நடிப்பின் மீது கவனம் செலுத்துவார் ஜெமினி கணேசன்.

கடைசி படத்தில் செஞ்ச விஷயம்

ஜெமினி கணேசனுக்கு தொடர்ந்து பெண்கள் மீது காதல் என்பது இருந்து வந்தது. அதனால்தான் அவரை காதல் மன்னன் என்று அழைத்தார்கள். நிறைய பெண்களுடன் அவர் அப்போது தொடர்பில் இருந்ததாகவும் பேச்சுக்கள் உண்டு.

இறுதி காலம் வரை அவர் இந்த காதல் மன்னன் என்னும் பெயருடன்தான் இருந்து வந்தார். அதற்கு தகுந்தார் போல நிறைய திருமணங்களையும் செய்திருக்கிறார் ஜெமினி கணேசன். இந்த நிலையில் ஜெமினி கணேசனின் கடைசி திரைப்படம் குறித்து அந்த படத்தில் பணி புரிந்த ஐஜி முருகன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

தெரிஞ்சு அதை பண்ணுனாரு

அதில் கூறும்போது ஜெமினி கணேசன் நடித்த கடைசி படம் அடிதடி திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன காட்சியில் மட்டும் ஜெமினி கணேசன் வருவதாக இருக்கும். அந்த காட்சிகள் நடிப்பதற்காக நான் நேரில் சென்று ஜெமினி கணேசனிடம் பேசினேன். அப்பொழுது அவர் ஆரம்பத்தில் 25 லட்சம் சம்பளமாக கேட்டார்.

அதற்கு பிறகு இது சின்ன படம் என்று கூறிய பிறகு 50 ஆயிரம் ரூபாய் கொடு என்று கூறியிருந்தார். பணத்தை கொடுத்தால்தான் நடிக்கவே வருவேன் என்று கூறிவிட்டார்.. எனவே அவரை அழைக்க செல்லும் பொழுது பணத்தை எடுத்து சென்றிருந்தோம் அதை கொடுத்து அவரை அழைத்துச் சென்று படப்பை முடித்து விட்டோம்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் இறந்து விடுவார் என்பது அவருக்கு தெரிந்திருந்ததா? என்று தெரியவில்லை சீக்கிரத்திலேயே டப்பிங் வேலையை முடித்து விட வேண்டும் என்று கூறினார். ஒரு நாள் அவராகவே போன் செய்து எனக்கு டப்பிங் விஷயங்களை முடித்து விடுங்கள் என்று கூறினார்.

பிறகு அவரை அழைத்து சென்று டப்பிங் வேலையை முடித்தோம் பிறகு சில நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ஐஜி முருகன்.