நீ தனியா வந்திருந்தா என்ன பாடு படுத்தீருப்ப.. இளம்பெண் கேள்வியால் ஷாக்கான மாரி செல்வராஜ்!.

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் வந்த பிறகு நிறைய இயக்குனர்கள் தனிப்பட்ட அரசியலை படமாக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார்கள்.

அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் அந்த மாதிரி படங்கள் நிறைய வந்திருந்தாலும் எந்த இயக்குனரும் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொண்டு திரைப்படங்களை இயக்க துவங்கவில்லை. அதை துவக்கி வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்தான்.

மாரி செல்வராஜ்

பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முக்கிய அரசியலை அவர் பேசியிருப்பார். அதையே பின்பற்றி இயக்குனர் பா.ரஞ்சித்தும் அவருடைய அரசியலை தனது திரைப்படங்களில் பேசத் தொடங்கினார்.

அந்த வகையில்தான் மாரி செல்வராஜூம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். பெரும்பாலும் மாறிசெல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை பேசும் வகையில்தான் திரைப்படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

என்ன பாடு படுத்தீருப்ப

அதனை தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெற்ற மாரி செல்வராஜ் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான கதைகளை படமாக்க துவங்கினார். அந்த வகையில் அவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் வெகுவாக பேசப்பட்ட படமாக அமைந்தது.

தனுஷ் இயக்கி பெரிய வெற்றியை கொடுத்த படமாக அந்த படம் அமைந்தது அதன் மூலமாக இன்னும் கொஞ்சம் பெரிய இயக்குனராக மாறினார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன் திரைப்படம்.

அந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது முக்கியமாக நடிகர் உதயநிதிக்கு முக்கியமான படமாக அந்த படம் அமைந்தது. இந்த நிலையில் அடுத்து தற்சமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் வாழை.

இளம்பெண் கேள்வியால் ஷாக்

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இது மாரி செல்வராஜின் சொந்த கதை என்று கூறலாம். சிறுவயதில் மாரிசெல்வராஜ் வாழை தோட்டத்தில் வேலை பார்த்த பொழுது நடந்த சம்பவங்கள்தான் தற்சமயம் வாழை என்கிற படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் தற்சமயம் பேசப்பட்டு வரும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜை ரசிகர்கள் சந்திக்கும் வகையில் சந்திப்பு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது அதில் திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.

அவர் பேசும் பொழுது கீழ்நாட்டுக்காரங்க எல்லாம் நல்லா வேலை பார்க்கிறவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் என்று கூறினார். இந்த பதில் மாரி செல்வராஜ்க்கு ஆச்சரியத்தை கொடுத்தது ஏனெனில் கீழ்நாட்டுக்காரங்க என்னும் வார்த்தை அவரது ஊரில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

பொதுவாக ஆறு சார்ந்து வேலை பார்க்கும் விவசாய குடிகளை கீழ்நாட்டுக்காரர்கள் என்று அழைப்பார்கள் இது எப்படி இந்த பெண்ணுக்கு தெரிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். அப்பொழுது அந்த பெண் நான் உங்கள் ஊருக்கு வந்துள்ளேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.

எங்கடா இந்த பொண்ண பிடிச்சீங்க என மாரி செல்வராஜ் ஆச்சரியத்துடன் கேட்க, முதல்ல நான் மட்டும் வரேன்னு நினைச்சுதான் வந்தேன் என அந்த பெண் கூறியுள்ளார். இப்பய இந்த கேள்வி கேக்குற தனியா வந்திருந்தா என்ன பாடு படுத்தீருப்ப என அதற்கு பதில் அளித்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் இந்த வீடியோ சமீபத்தில் ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது.