Box Office Report..! முதல் நாள் வசூலில் திணறிய GOAT..! அந்த படத்தின் வசூலில் பாதி கூட இல்ல..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் அஜ்மல், லைலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ஆன விஷயங்கள் இருந்தாலும் கூட படம் முழுக்க வேறு நடிகர்களின் ரெஃபரன்ஸ் நடிகர் அவர்களின் படங்களில் இடம்பெற்று ஹிட்டடித்த பின்னணி இசை ஆகியவற்றை பயன்படுத்தி கோட் படத்தின் தனித்தன்மையை குறைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

இப்படி விமர்சனங்கள் வந்தாலும் படத்த பார்த்த ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பு இருக்கிறது. படமும் எந்த சலிப்பும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் லியோ படத்தை ஒப்பிடுகையில் குறைவாகத்தான் வசூலாகி இருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

லியோ திரைப்படம் முதல் நாள் 148 கோடி வசூல் செய்திருக்க.. கோட் திரைப்படம் முதல் நாளில் இந்த திரைப்படம் வெறும் 73 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் 38 கோடி ரூபாய் என்றும் தெலுங்கில் 5 கோடி ரூபாயும் ஹிந்தியில் 1.7 கோடி வசூல் செய்திருக்கும் இந்த படம் கேரளாவில் முதல் நாளில் வரும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது என கூறப்படுகிறது.

எந்தவித ஹைப்பும் இல்லாமல் வெளியானதே இந்த படத்தின் வசூல் சரிவுக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் பாசிட்டிவ் ரிவ்யூ காரணமாக படத்தின் வசூல் எகிரும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், முதல் நாள் வசூல் என்று கணக்கில் லியோ படத்தை விடவும் குறைவான வசூலையே இந்த படம் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள்.