இதுவரைக்கும் இருந்த சாதனையை ப்ரேக் செய்த கோட்… அந்த படத்தையே ஓரம் கட்டிட்டா.. ரைட்டு..!

மக்களின் வெகுநாளையை எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கோட். கடந்த ஐந்தாம் தேதி வெளியான கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகி வரும் கோட் திரைப்படத்திற்கு விமர்சனங்களும் நல்ல வகையில் கிடைத்து வருகிறது. முக்கியமாக மங்காத்தா திரைப்படத்தில் அஜித்தை காட்டியதை விட இந்த திரைப்படத்தில் விஜய்யை அதிக வில்லனாக காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

சாதனையை ப்ரேக் செய்த கோட்

அது மக்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆகியும் இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் இவ்வளவு பெரிய வில்லனாக விஜய் நடிக்கவில்லை. சரியாக சினிமாவை விட்டு செல்வதற்கு முன்பு தரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய்.

தற்சமயம் கதாநாயகனாக இருக்கும் விஜயை விட வில்லன் விஜய்க்கு ரசிகர்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றனர். அதேபோல அடுத்த பாகத்திற்கு  கதை இருக்கும் வகையில்தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய் அடுத்து படம் நடிக்கப் போவதில்லை என்பதுதான் இதில் சோகமான சோகமான விஷயம். இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படத்திலேயே பெரிய பட்ஜெட் திரைப்படம் கோட் படம்தான்.

பெரும் வசூல்

ஏனெனில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் லைக்கா அல்லது சன் பிக்சர்ஸ் போல பெரிய தயாரிப்பு நிறுவனம் கிடையாது. அது சின்ன சின்ன பட்ஜெட்டில் தான் படங்களை தயாரித்து வந்தது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தை தயாரிக்க 400 கோடி செலவானதாக கூறப்படுகிறது.

இந்த 400 கோடி ரூபாயிலேயே பாதி தொகையை கடனாக வாங்கி தான் ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை தயாரித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் விஜய்க்கு சம்பளமே 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்பதால் படத்தின் தயாரிப்பு செலவுகளும் அதற்கு இணையாக அதிகரித்துவிட்டது.

அந்த படத்தை ஓரம் கட்டிட்டு

எனவே ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு இந்த படம் தோல்வியடைந்தது என்றால் அது அவர்களது நிறுவனத்தையே பெரிதாக பாதித்துவிடும் என்கிற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கோட் திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில்  அதிக வசூல் செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் கோட் திரைப்படம் 288 கோடிக்கு வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவிலேயே இதற்கு முன்பு அதிக வசூலை கொடுத்த படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது திரைப்படம் இருந்தது. ஆனால் இப்பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் ஐந்து நாள் வசூலை பிரேக் செய்து இருக்கிறது கோட் திரைப்படம்.

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் கழித்து 100 கோடிதான் வசூல் செய்திருந்தது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது கோட் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து எப்படியும் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக கோட் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.