வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு இவருடைய மகன் நடிகர் சக்தி.

திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அறிமுகமான சில திரைப்படங்களில் இவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தொடர்ந்து மோசமான கதை தேர்வு மற்றும் உடல் எடையை கவனிக்காமல் விட்டது போன்ற விஷயங்களால் இவருடைய சினிமா வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த படத்தை திரையிட எந்த திரையரங்கம் முன்வரவில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றார் நடிகர் சக்தி. உச்சகட்ட கொடுமையாக இவர் நடித்த ஒரு படத்தை எந்த திரையரங்கம் வெளியிட முன்வராத நிலையில் ஒரே ஒரு திரையரங்கு மட்டும் இவருடைய படத்தை திரையிடும் முன் வந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சி தான் திரையிடுவோம் என கூறியிருக்கிறது.

இதனால் மிகுந்த மன வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளானார் நடிகர் சக்தி. இதன் காரணமாக மது பழக்கத்திற்கு ஆளான இவர் ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகவும் மாறினார்.

ஒருமுறை மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய பிரச்சனைகளுக்கு இவர் காரை விட்டு வெளியே வந்து மது போதையில் கூச்சல் போட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆனது. வேட்டி அவுந்தது கூட தெரியாமல் தலைக்கேறிய போதையில் ஆட்டம் போட்டார் சக்தி.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு யூடுப் சேனல் ஒன்றின் பேட்டியில் தன்னுடைய தந்தையுடன் கலந்து கொண்ட நடிகர் சக்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அதில்தான் கற்றுக் கொண்ட பாடங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஒரு கட்டத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கும் மன வேதனைக்கும் உள்ளானேன். அதன் காரணமாக மதுவுக்கு அடிமையாக நேர்ந்தது. அதனால் எனக்கு இன்னும் பிரச்சனைகள் அதிகமானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தபோது என் தந்தை எவ்வளவோ கூறியும் நான் அவருடைய பேச்சை கேட்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அந்த நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட விதம் என்னை கெட்டவன் போல வெளியில் காட்டிவிட்டது இதனாலும் எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது அதன் பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் கூட எனக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப மோசமான விஷயங்களை எல்லாம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன்.

அதன் பிறகு அந்த மது பழக்கத்திலிருந்து நான் தற்போது மீண்டு வந்திருக்கிறேன். ஸ்டார் படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள் அதில் ஹீரோவாக நடித்த கவின் ஒரு காட்சியில் கண்ணாடி பார்ப்பது தவிர்த்து விடுவார். கண்ணாடியை உடைத்து விடுவார்.

அது அப்படியே என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் கண்ணாடி பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். அப்போது என்னுடைய தந்தை என்னிடம் வந்து நீ எவ்வளவோ விஷயங்களை செய்திருக்கிறாய்.

ஆனால் அப்போதெல்லாம் உன் மீது எனக்கு நம்பிக்கை போகவில்லை. நீ எப்படியும் ஜெயித்து விடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. அப்போது உன் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தது. எப்போது நீ முகத்தை கண்ணாடியில் பார்ப்பதை தவிர்த்து விட்டாயோ அப்போதே நீ தோற்று விட்டாய். நான் உடைந்து போய் விட்டேன்.

ஒரு மனிதன் எப்போது தன்னுடைய நம்பிக்கையை இழக்கிறானோ.. அப்போதுதான் தோற்றுப் போகிறான். அதுவரை அவனுக்கு கிடைக்கும் தோல்விகள் எல்லாம் அவன் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரங்கள் தான் என்று கூறினார் என் அப்பா.

நிச்சயமாக நான் இப்படியான மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவேன். மீண்டும் திரைப்படங்களில் நடித்து ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்று நம்புகிறேன் என கூறியிருக்கிறார் நடிகர் சக்தி.