தமிழ் சினிமாவை கலக்கும் இரட்டை குழந்தைகள்.. 3வது குழந்தைக்கு அப்பாவான காமெடி நடிகர்..! குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகர் சித்தார்த், நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி..? என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் அர்ஜுனன்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுனனுக்கு திருமணம் ஆகி இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர்.

ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மகனின் பெயர் இலன் மகளின் பெயர் இயல்.

இருவரும் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடிகர் கவின் நடிகை அபர்ணாதாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் கவின் மகனாக நடித்திருந்தது வேறு யாரும் கிடையாது நடிகர் அர்ஜுனனின் மகன் இளன் தான்.

அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்த அசத்தியிருந்தார் நடிகர் அர்ஜுனனின் மகள் இயல்.

லியோ பட வெற்றி விழா மேடையில் அரங்கை அதிரவைக்கும் அளவுக்கு பேசி கலக்கியிருந்தார் இயல்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் கோலிவுட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் நடிகர் அர்ஜுனன். இந்த குழந்தைக்கு இமையன் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் சுத்த தமிழில் பெயர் வைத்துள்ள நடிகர் அர்ஜுனனுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.