என்னடா ம*** என்ன மாதிரியே நடிக்கிறியாம்ல.. வளர்ந்து வந்த நடிகருக்கு வடிவேலு செய்த கொடுமை..!

2024 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமிழில் வெளி வந்த காதல் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகரான சுகுமார் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம் எந்த படத்தில் பரத்தின் நண்பராக அவர் நடித்ததின் மூலம் பிரபலமானார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல சினிமா வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த படங்களில் நடித்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இப்படி சினிமாவை விட்டு இவர் விலக காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

இதில் இவர் திரையுலகை விட்டு வெளியேறுவதற்கு காரணம் வடிவேலு தன்னை பல வகைகளில் துன்பப்படுத்தியதோடு நான் சினிமாவில் வளர்ந்து வருவதை விரும்பாத அவர் என் திரையுலக வாழ்க்கையை அழிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்திய கதையைத்தான் தற்போது கூறி இருக்கிறார்.

மேலும் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் வடிவேலு சினிமாவில் பீகில் இருந்தார். அந்த சமயத்தில் தான் பல மேடை நிகழ்ச்சிகளில் அவரைப் போலவே நான் பேசியதால் பல கம்பெனிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அதே சமயத்தில் நான் கலகலப்பு என்ற படத்தில் வடிவேலுவை போலவே நடித்து இருந்தேன். அப்போது மானஸ்தான் படப்பிடிப்பின் போது வடிவேலுவிற்கு காலில் அடி பட்டு விட்டதால் அவரால் படப்பிடிப்புக்கு கலந்து கொள்ள முடியாமல் போனது எனவே அவனுக்கு பதிலாக என்னை நடிக்க அழைத்தார்கள்.

நான் அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். இதனை அடுத்து இந்த தகவல் எப்படியோ மருத்துவமனையில் இருக்கும் வடிவேலுவின் காதுக்கு சென்று விட்டது.

இந்நிலையில் முத்துக்காளை மற்றும் போண்டா மணி இருவரும் வடிவேலு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் என  ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார்கள். நானும் அவரை பார்ப்பதற்கு ஆவலாகவும், ஆசையோடும் இருந்தேன்.

அவரும் என்னை உள்ளே அழைக்க நானும் உள்ளே சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இதனை அடுத்து வடிவேலு முத்துக்காளை மட்டும் போண்டா மணியை வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் பேசிய விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் வடிவேலு என்னிடம் என்னை மாதிரி நடிப்பேன்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சான்ஸ் கேட்கிறாயா? என்று சொல்லி முடிப்பதற்குள் அருகில் இருந்த சிங்கமுத்து மற்றும் உடன் இருந்த அனைவரும் என்னை திடீரென்று அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சுதாகரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. என் சட்டை பட்டன் எல்லாம்  கீழே விழு, அழுது கெஞ்சி நான் நடிக்கவே இல்லை ஊருக்கு சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டேன். இவனை இப்படியே வெளிய விட்டால் வேலைக்காகாது என்று சொல்லி பத்திரிக்கையில் உளறி விட்டால் என்ன செய்வது என என் தங்கையின் படிப்பு செலவுக்காக உதவி கேட்டு வடிவேலு அண்ணனை பார்க்க வந்தேன். எனக்கு அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் என எழுதி வாங்கிக் கொண்டார்.

இந்த கடிதம் கூட இன்னும் வடிவேலு இடம் தான் உள்ளது. இதனை அடுத்து வெளியே வந்த என்னை பார்த்து போண்டா மணி, முத்துக்காளை இருவரும் மன்னித்துவிடு என்று கூறி கண் கலங்கினார்கள் எனக் கூறிய செய்தி  தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

ஏற்கனவே வடிவேலுவின் பெயர் டேமேஜ் ஆன நிலையில் மீண்டும் அவரைப் பற்றி இத்தகைய செயல் வெளி வந்திருப்பது தற்போது ரசிகர்களின் மத்தியில் அவரை ஒரு கொடூரமான மனிதராக சித்தரித்து உள்ளது.