கட்டுத்துணி இல்லாத காலத்தில் 5 செட் பேண்ட் சர்ட் வாங்க கொடுத்த கேப்டன்..! அஞ்சலி செலுத்த கூட போகாத வடிவேலு..! விளாசும் ரசிகர்கள்..!

பொதுவாகவே மனிதர்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பார்கள். ஆனால் ஒரு சில மனிதர்கள் அவர்களின் மூலம் நன்கு வளர்ச்சி அடைந்த பிறகு  எவர் பற்றியும் கவலை கொள்ளாமல் நன்றி உணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னை வளர்த்தி விட்ட விஜயகாந்த் இறப்புக்கு கூடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தாமல் மிதப்பில் இருப்பது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தது முதல் முதலாக நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ்கிரண். அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரண் கஷ்ட காலத்தில் இருந்த போது அவருக்கு பணத்தை சிறிது அளவு கொடுத்துவிட்டு அதை தண்டூரா அடித்து சொல்லிக் காட்டியவர் வடிவேலு. இதனால் விஜயகாந்தின் கோபத்திற்கு ஆளானார்.

மேலும் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க கூடாது என்று கவுண்டமணி சொல்ல விஜயகாந்த் இடம் போய் வடிவேலு ஒப்பாரி வைத்து அழுது கடைசியாக குடை பிடிக்கும் கேரக்டரை பெற்றுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் கட்டுவதற்கு துணி இல்லாமல் தவித்த வடிவேலுவுக்கு தன் சொந்த செலவில் 5 வேஷ்டி, சட்டையை வாங்கி கொடுத்து வளர்த்து விட்டவர் விஜயகாந்த். அந்த நன்றியை மறந்து ஒரு காலகட்டத்தில் விஜயகாந்தை படு கேவலமாக திட்டிய விஷயம் எல்லோருக்கும் தெரியும்.

எனவே தான் திரையுலகம் இவரை ஒதுக்கி வைத்தது. எப்போதுமே நடிகர் வடிவேலுவுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும் அதாவது தன்னோடு நடித்து கஷ்டப்பட்ட நடிகர்கள் யார் இறந்தாலும் ஒத்த பைசா கூட கொடுக்க மாட்டார். அது போல நேரில் சென்று அஞ்சலியும் செலுத்த மாட்டார்.

அப்படித்தான் மறைந்து போன விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டா மணி ஆகியோரின் இறப்புக்கு அவர் நேரில் சென்று அஞ்சவில்லை. யார் இறந்து போனாலும் உடனே மதுரைக்கு டிக்கெட் போட்டு ஓடி விடுவார், அது

போல் மதுரையில் இருக்கும் யாராவது இறந்து விட்டால் சென்னைக்கு டிக்கெட் போட்டு வந்து விடுவது இவரது இயல்பான விஷயம்.

எனவே கண்டிப்பாக கேப்டனின் இறப்பிற்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மாட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மையாகும் என்பது விரைவில் தெரிந்து விடும் என சில ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.