அதிகம் கூகுள் செய்யப்பட்ட TOP 10 தென்னிந்திய நடிகர்கள்..!

கூகுள் தேடுதலில் தனக்கு பிடித்த விஷயங்களை, தங்களுக்கு தேவையான நபர்களை தேடுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சினிமா ஆர்வம் உள்ள மக்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களை அறிய அடிக்கடி தங்களது மொபைல் போனில் அல்லது லேப் -டாப்பில், அவர்களது பெயர்களை குறிப்பிட்டு கூகுளில் தேடுவது வழக்கம்.

அப்படி ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அதிகளவில் தேடப்பட்ட பிரபல நபர்கள், நடிகர்கள் குறித்த தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் 2023ம் ஆண்டில் கூகுள் தேடுதலில் அதிகளவில் தேடப்பட்டவர்களில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதாவது தென்னிந்திய நடிகர்களில் முதல் 10 இடங்களில் அதிகமுறை தேடப்பட்டவர்கள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் வரும் நடிகர்களை பார்த்தால், மிகவும் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் இதிலும் ஒரு முக்கிய நடிகர்தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அதுபற்றி தெரிந்துக்கொள்வோம்.

இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜீத்குமார். துணிவு மட்டுமே இவரது படமாக 2023ம் ஆண்டில் வெளிவந்தது. விடாமுயற்சி படப்பிடிப்பில் தற்போது இருக்கிறார். அதனால் தேடுதலில் 10வது இடத்தில் இருக்கிறார் அஜீத்குமார். அடுத்து 9வது இடத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், 8வது இடத்தில் அவரது மகன் ராம்சரணும் இருக்கின்றனர்.

அடுத்து 7வது இடத்தில், நடிகர் சூர்யா இருக்கிறார். கங்குவா படத்தில் இப்போது நடித்து வருகிறார். 6வது இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இருக்கிறார். 5வது இடத்தில் நடிகர் தனுஷ், 4வது இடத்தில் நடிகர் பிரபாஸ் இருக்கின்றனர். இதில் பிரபாஸ் நடித்த சலார் படம் இப்போது திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

கூகுள் தேடுதலில் 3வது இடத்தில் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகர். அடுத்து 2வது இடத்தில் இருப்பது வேறு யாருமல்ல, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அடுத்து கூகுள் தேடுதலில் தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தை பிடித்தது தளபதி விஜய்தான். வாரிசு, லியோ படங்கள் அவரது நடிப்பில் 2023ல் வெளிவந்த நிலையில், அவருக்கான தேடுதல் மிக மிக அதிகமாக இருந்ததால், விஜய் முதலிடத்தில் இருக்கிறார். இது, விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.