என்னோட அந்த உறுப்பை பிடித்து.. இப்படி பண்ணான்.. அதனால தான் அடிச்சேன்.. காரணத்தை கூறிய VJ Aishwarya..!

தமிழ் திரையுலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பட சிறப்பு விழாவில் தொகுப்பாளினியாக VJ Aishwarya செயல்பட்டார். மேலும் அங்கு நடந்த நிகழ்வை அடுத்து தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் பெரிய அளவு பாராட்டுகள்களை VJ ஐஸ்வர்யா பெற்று வருகிறார்.

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பான கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக அவர்களோடு இணைந்திருக்கிறார். ஏற்கனவே இவர் தொடரி, பட்டாசு, மாறன் போன்ற படங்களை இவர்களோடு இணைந்து நடித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளி வர இருக்கும் கேப்டன் மில்லன் திரைப்படமானது வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளி வர உள்ளது.

இதனை அடுத்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படத்தின் முன்னோட்டக் காட்சி நடைபெற்றது. இந்த காட்சியைக் காண பட குழுவினர் அனைவரும் திரண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பங்கேற்று இருந்தார்.

மேலும் இந்த விழாவை காண்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்திருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த நபரை கால் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததோடு அடித்து வெளுத்து விட்டார்.

அத்தோடு அந்த நபரை நோக்கி செருப்பு பிஞ்சிடும் நடிக்கிறயா? தப்பு பண்ணலேன்னா.. எதுக்கு ஓடற.. என்பது போன்ற வார்த்தைகளை தெறிக்க விட்டு அந்த நபருக்கு கொடுத்த தண்டனையைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போனதோடு அவரது தைரியத்தை பார்த்து பாராட்டுதல்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இது நிமித்தமாக என்ன நடந்தது என்பது பற்றி ஐஸ்வர்யா விளக்கம் அளித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒருவன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டான். உடனடியாக அவனைப் பிடித்தும் அடி கொடுக்கும் வரை விடவில்லை. ஆனால் அவன் என்னிடம் இருந்து தப்பி ஓட முயன்றதால் பிடிக்க கத்திக் கொண்டே அடித்தேன்.

அத்தோடு ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் எவ்வளவு துணிவிருந்தால் ஒரு பெண்ணின் உடலை தொடக்கூடிய தன்மை அவனுக்கு ஏற்பட்டிருக்கும். என்னை சுற்றி நல்ல மனிதர்களும் இருந்தார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும்.

என்றாலும் இவனைப்போல சிலர் இந்த உலகில் இருப்பதால் சற்று அச்சமாக உள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரைப் போல துணிச்சலாக அந்த ஸ்பாட்டிலேயே முதுகெலும்பு இல்லாத சபல புத்தி கொண்ட ஆணை அடித்து நியாயம் கேட்டது தவறு இல்லை.