90ஸ் நடிகை வினிதாவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் 1990 களில் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை வினிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் மலையாள நடிகர் ஜெயராமோடு இணைந்து நடித்த திரைப்படத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி இவர் தனது அருமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.

எத்தகைய கேரக்டரையும் எளிதாக செய்யக்கூடிய தன்மை கொண்ட வினிதாவிற்கு ரசிகர்கள் அதிகளவு இருந்தார்கள். குறிப்பாக ரசிகர்கள் இவர் மீது கிரஷ்ஷாக இருந்தார்கள் என கூறலாம்.

மேலும் இந்த சமயத்தில் அதிக அளவு புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும் சற்று உடல் எடை அதிகரித்த இவருக்கு மார்க்கெட் அப்படியே சரிந்து போனது. இதனை அடுத்து இவர் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். மேலும் சிலர் இவரைப் பற்றி மறந்தும் இருப்பார்கள்.

இவர் மற்ற நடிகைகளை போல சினிமாவில் இருந்து விலகிய பின்னர் சமூக வலைத்தளங்களிலோ, பொது நிகழ்வுகளிலோ அதிகளவு பங்கேற்றதில்லை என்று கூற வேண்டும். இதை அடுத்து யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் பல நாட்களுக்குப் பிறகு இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளி வந்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து அட இது நமது வினிதாவா? என்று பலரும் ஆச்சரியத்தோடு கேள்விகளை வைத்திருக்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் வினிதா இப்போது எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும்.