பெண் ஒளிப்பதிவாளரிடம் இப்படியா நடந்துகொள்வது.. மிஷ்கினை பார்த்து நொந்து போன தயாரிப்பாளர்..!

இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். முதல் படத்திலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்தான் அப்போது எல்லா இடங்களிலும் டிரண்டிங் ஆக இருந்தது.

அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படம் மிரட்டலாக இருந்தது. இதில் பொன்வண்ணன் போலீஸ் அதிகாரியாகவும், பிரசன்னா, பாண்டியராஜன் போன்றவர்கள் கொடூர வில்லன்களாகவும் நடித்திருந்தனர். இளம்பெண்களை கடத்தி பணம் பறிக்கும் பிளாக் மெயிலர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வேற லெவலில் இருந்தது.

அடுத்து துப்பறிவாளன், சைக்கோ என மிஷ்கின் படங்கள் என்றாலே, அதற்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறது. மிஷ்கின் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். சவரக்கத்தி, லியோ போன்ற படங்களில் அவரது நடிப்பையும் வெகுவாக ரசிக்க முடிகிறது.

சமீபமாக மிஷ்கின் இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவரது தம்பி படத்துக்கு அவரே இசை அமைக்கிறார். அவ்வப்போது மேடைகளில் மிஷ்கின் பாடவும் செய்கிறார். இப்படி நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர் என்ற அடையாளங்களுடன் பலருக்கு தெரியாத மற்றொரு விஷயத்தையும் மிஷ்கின் செய்து வருகிறார்.

அதாவது இப்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் என்ற படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கவுசிகா என்ற பெண் ஒளிப்பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பூனேவில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த, மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக கூறப்படுகிறார். அவருக்கு சம்பளமாக ரூ. 25 லட்சம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரெயின் படத்தின் ஷூட்டிங்கை பார்க்க தயாரிப்பாளர் தாணு நேரில் சென்றிருக்கிறார். அப்போது படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஒளிப்பதிவாளர் கவுசிகாவை ஓரமாக நிற்க வைத்துவிட்டு அங்கு நடந்த காட்சிகளை கேமராவில் ஷூட் செய்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாணு விசாரித்த போது, கவுசிகாவை ஷூட் பண்ண விடாமல், மிஷ்கின் கேமராவை பறித்துக்கொண்டு அவரே ஷூட் செய்வது பல நாட்களாக நடப்பதாக தெரிய வந்துள்ளது.

மிஷ்கின் படங்களில் ஒளிப்பதிவாளராக வருபவர்களுக்கு இதே போல் நடப்பதால் பலரும், ஒரு படத்துக்கு பிறகு அடுத்தமுறை மிஷ்கின் படத்தில் ஒளிப்பதிவாளராக வருதே இல்லையாம். அத்துடன் ஸ்ரீராம் போன்ற பெரிய ஒளிப்பதிவாளர்களே பாதி படத்துடன், கேமராவை தூக்கிக்கொண்டு நீயே மீதியை எடுத்துக்கோ கோபமாக சொல்லிவிட்டு சென்றுள்ளதாக அங்கிருந்த சிலர் கூறியுள்ளனர். இதைத்கேட்டு தயாரிப்பாளர் தாணு வேதனையின் உச்சத்துக்கே போயிருக்கிறார்.