14 வயசில் ஹீரோயின்.. 54 படங்கள்..! 22 வயசில் துடிதுடித்து மரணம்..! காரணம் யாரு தெரியுமா..?

தமிழ் திரை உலகில் காதல் தோல்வியால் 22 வயதில் மரணத்தை தழுவிய டாப் ஹீரோயின் பற்றிய பதிவை தான் இந்த பதிவில் படிக்க இருக்கிறோம். இந்த ஹீரோயினி அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

ஆந்திராவில் பிறந்த இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார்.

மலையாளத் துறையில் நடித்த இவரை சுப்ரியா என்ற பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு வேறொரு பெயர் இருந்தது. இந்த பெயரை வைத்ததும் இயக்குனர் பாலச்சந்தர் தான்.

மலையாளம், தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் சிரஞ்சீவி உட்பட்ட பல நடிகர்களோடு இணைந்து ஏறக்குறைய 66-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அற்புத நடிகையாக விளங்கினார்.

மேலும் முள்ளும் மலரும் என்ற படத்தில் இவர் ரஜினியோடு இணைந்து நடித்தது ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத நினைவுகளாக இருக்கும் என்று கூறலாம். குறிப்பாக இந்த படத்தில் வரும் நித்தம் நித்தம் நெல்லு சோறு என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை தன் பக்கம் வசப்படுத்தியவர்.

14 வயதில் ஹீரோயினியாக அறிமுகமான இவர் எம்ஜிஆரின் அண்ணனான எம்ஜி சக்கரபாண்டியன் மகன் எம்சி சுகுமாரை உருகி, உருகி காதலித்தார். இதனை அடுத்து தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கு கொடுத்து ஏமாந்தார்.

ஒரு பக்கம் தன்னையும், தன் சொத்தையும் சுகுமாருக்காக கொடுத்தும் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்த காரணத்தால் மன வேதனையில் இருந்த அந்த நடிகை தூக்க மாத்திரைகளை அதிகளவு சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகையாக ஜொலிக்க கூடிய அத்தனை அம்சங்களும் நிறைந்த இவர் தன்னுடைய காதல் தோல்வியால் 22 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள தவறான பாதையை தேர்ந்தெடுத்தார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஜெயலட்சுமி தான்.