கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? – இதோ புகைப்படம்..!

பாரதிராஜா இயக்கத்தில், பரட்டையன் கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினி, சப்பாணி கேரக்டரை நடித்த கமலை அழைத்து மிரட்டி, உடம்புக்கு எண்ணெய் தேய்த்து விடச் சொல்வார்.

அப்போது ரஜினியுடன் இருக்கும் அல்லக்ககைகளில் ஒருவராக நடித்திருப்பார் கவுண்டமணி.

அந்த படத்தில் கவுண்டமணி நடிக்க பாரதிராஜாவிடம் பலமாக சிபாரிசு செய்தவர் உதவி இயக்குநரான கே. பாக்யராஜ்தான். பத்த வெச்சுட்டியே பரட்ட டயலாக் மூலம் கவுண்டமணி கவனிக்கப்பட்டார்.

அடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணனாக நடிப்பில் கலக்கியிருப்பார் கவுண்டமணி.

சரோஜா, குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்று கவுண்டமணி அன்று பேசிய அந்த டயலாக்கை இப்போதும் கவுண்டமணி ரசிகர்கள் சொல்லி சொல்லி ரசிக்கின்றனர்.

கவுண்டமணி,

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனிக்கென ஒரு புகழ் உச்சியை தொட்டவர்
கவுண்டமணி. அதுவும் செந்திலும் அவரும் சேர்ந்து செய்த காமெடி காட்சிகள், தமிழ் சினிமாவில் சாகா வரம் பெற்றவை.

டைரக்டர் கங்கை அமரன், ராமராஜன் ஹீரோ, இளையராஜா இசை, கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே 1990, 90களில் 100 நாட்கள் என்பது கன்பார்ம் தான்.

பல படங்களில் செந்திலை அடிப்பதும், திட்டுவதும்தான் கவுண்டமணியின் வேலையாக இருந்தாலும் அதுவும் மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்திருக்கின்றன.

கரகாட்டக்காரன், எஜமான், இந்தியன், கோவில்காளை, சின்னக்கவுண்டர், ஊருவிட்டு ஊருவந்து, பொன்னுமணி, ஒண்ணா இருக்க கத்துக்கணும், நான் பெத்த மகனே என, பல படங்களில் கவுண்டமணி செந்தில் ஜோடி காமெடியில் வேற லெவலில் அதகளம் செய்திருக்கும்.

சேவை..

நடிகர் கவுண்டமணியின் மனைவி பெயர் சாந்தி. மகள்கள் பெயர் செல்வி மற்றும் சுமித்ரா. தன்னை வெளியுலகில் அறிமுகப்படுத்திக்கொண்ட கவுண்டமணி, தன் குடும்பத்தை காட்டவே இல்லை.

அவரது மனைவி, மகள்கள் பற்றிய விவரம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. அவர்களை சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அவர் அழைத்துக்கொண்டு வந்தது இல்லை.

இந்நிலையில் அவரது மகள்களில் ஒருவரான சுமித்ராவின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அவர் பார்ப்பதற்கு ஹீரோயின் போல மிக அழகாக இருக்கிறார்.

சென்னையில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ஒருநாள் தனது கணவருடன் வந்து சேவை செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கவுண்டமணியின் மகள் புகைப்படத்தை பார்த்த பலரும், அசந்து போயிருக்கின்றனர். புற்றுநோய் காப்பக நோயாளிகளுக்கு அவர் சேவை செய்வதும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.