25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்.. முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யாருன்னு தெரியுமா..?

விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமானது 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளி வந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தை செய்ய இருந்த நடிகர் பற்றிய விஷயம் தற்போது வைரலாக பரவி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு நடிப்பதற்கு பதிலாக காமெடி நடிகரான ஒருவரை தான் முதலில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்கள்.

காமெடி கதை..

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியது சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் பொதுவாகவே புதிதாக அறிமுகமாகும் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனராக எழில் அறிமுகம் ஆனார். மேலும் இந்த திரைப்படத்திற்கான இசையை எஸ்.ஏ ராஜ்குமார் அமைத்திருக்கிறார். அத்தோடு இந்த படத்தில் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கும் தளபதி விஜய் மற்றும் சிம்ரன் நடித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே 90 கால கட்டங்களில் அதிக அளவு காதல் படங்களை வெளி வந்தது. அந்த வரிசையில் விஜய் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் மாபெரும் கிட்டை தந்ததோடு அதிக அளவு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்த படத்தில் பாடகர் ஆக மாற விரும்பிய தளபதி விஜய் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். இவரது குரலை மட்டுமே ரசிப்பவராக சிம்ரன் விளங்குவார். மேலும் விஜயை நேரில் பார்க்கும் போதெல்லாம் அவரை ஒரு ரவுடி என்று நினைத்துக் கொண்ட சிம்ரன் தன் மனம் கவர்ந்த பாடகர் அவர்தான் என்பதை ஒரு கட்டத்தில் தான் தெரிந்து கொள்வார்.

குட்டி என்ற கதாபாத்திரத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய விஜய். மேலும் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் சிம்ரனின் கண் பார்வை பறி போக அதை சரி செய்ய தன் சிறுநீரகத்தை தானம் செய்து பார்வையை திரும்ப பெற்றுத் தருகிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் இல் விஜய் தான் தன் மனம் கவர்ந்த பாடகர் என்ற உண்மை சிம்ரனுக்கு தெரிய வர இறுதியாக இருவரும் ஒன்று சேர்வது தான் ஹைலைட்டான விஷயம். சுமார் 200 நாட்கள் மேலாக இந்த படம் ஓடி மாபெரும் வெற்றியை தளபதிக்கு பெற்றுத்தந்தது.

வடிவேலு ஹ்ஹீரோ..

ஆனால் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க விஜய்யை இயக்குனர் கூறவில்லை. வேறொரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கத்தான் விரும்பினார். மேலும் இந்த படமானது நகைச்சுவை நிறைந்த படமாக அமைக்கவே விருப்பப்பட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் பேசும் போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை ஒரு முழு நீள காமெடி திரைப்படமாக எழுதியதோடு அந்த படத்துக்கு ஹீரோவாக நடிகர் வடிவேலுவை தேர்வு செய்து வைத்திருந்தாராம்.

இந்நிலையில் தான் இந்த படத்தை ஒரு கமர்சியல் படமாக மாற்ற திட்டமிட்டு நடிகர் விஜயிடம் கதையை கூற அவரும் உடனே என்று ஓகே சொல்லி நடிக்க சம்மதித்தார்.

இதனை அடுத்து தான் இந்த கதையில் சில மாற்றங்களை செய்து சிம்ரனையும், தளபதி விஜய்யும் நடிக்க வைத்ததாக படத்தில் இயக்குனர் எழில் கூறியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இன்றோடு 25 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் மத்தியில் இந்த படம் ஒரு வெற்றி படமாக இருப்பதற்கு காரணம் விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடியதுதான் மேலும் இவர்களது கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிக சிறப்பான முறையில் அமைந்திருந்தது.

எனவே தற்போது இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் எழில் கூறிய விஷயத்தை அவர்களின் நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.