ஆதரங்களுடன்.. கையும் களவுமாக சிக்கிய நடிகர் இளவரசு..! – பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவக்கியவர் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர் இளவரசு.

பாஞ்சால குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் பேசியிருப்பார் இளவரசு. ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார்.

இளவரசு..

முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், அறை எண் 305ல் கடவுள், லிங்கா, ஜன்னல் ஓரம், தவமாய் தவமிருந்து, என்ஜிகே என பல படங்களில் நடித்திருக்கிறார் இளவரசு.

இந்நிலையில் போலீசார் மீது தவறான குற்றச்சாட்டை சொன்ன இளவரசை சென்னை நீதிமன்றம், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம், கடந்த 2018ம் ஆண்டில், சங்கத்தின் முன்னாள் ஊழியர்கள் மீது நிதி முறைகேடு செய்ததாக தி நகர் போலீசில் புகார் அளித்தது.

இந்த விசாரணை 4 மாதங்களுக்குள் முடித்து அதன் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது,

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் இளவரசு அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இளவரசு, டிசம்பர் 12ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக, போலீஸ் தரப்பில் சிசிடிவி பதிவு காட்சிகள் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

சிக்கிய ஆதாரங்கள்..

ஆனால், டிசம்பர் 12ம் தேதி மாமல்லபுரத்தில், ஷூட்டிங்கில் இருந்ததாகவும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்த சிசிடிவி காட்சிகள் போலியானவை என்றும் இளவரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லொக்கேஷன், சிடிஆர் எனப்படும் மொபைல் அழைப்பு விவரங்களையும் போலீசார் திரட்டினர்.

குறிப்பிட்ட டிசம்பர் 12ம் தேதி, மாமல்லபுரத்தில் ஷூட்டிங் ரத்து ஆனதால் அவர் அங்கு போகவில்லை. சென்னையில் உள்ள ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

அதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் சமர்ப்பித்தனர்.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, போலீஸ் ஸ்டேஷனில் இளவரசு ஆஜரானதற்காக ஆவணங்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் அவர் பொய் சொல்ல வேண்டாம்.

டிசம்பர் 12ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து, வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளார்.

போலீசாரிடம் சிக்கிய ஆதாரங்களால், கையும் களவுமாக இளவரசு பிடிபட்டுள்ளார்.
இனியும் பொய் சொல்லாமல் மன்னிப்பு கேட்டால் அடுத்தக்கட்ட கோர்ட் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற பரபரப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.