குழந்தைகளுக்காகன்னு சொன்னது எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டாம்.. உண்மை இது தானாம்..!

திட்டம் போட்டு காய் நகர்த்திய நடிகை இப்போது அவர் நினைத்ததை எல்லாம் சாதித்து இருக்கிறார். இது தெரியாமல் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிய பிரைட் நடிகர் சூப்பராக ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.

திறமை காட்டிய நடிகை

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து திறமை காட்டியவர்தான் இந்த நடிகை. சிவாஜிக்கு பிறகு ஓவர் ஆக்டிங்கில் பெயர் வாங்கிய ஒரு நடிகையாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டவர் இவர்தான்.

அக்கா நடிகையான அவர், இந்தியாவின் முக்கிய நகரமான இங்கு வந்துவிட்டால் பட வாய்ப்புகள் வரிசை கட்டி வரும். ஏராளமான படங்களில் நடித்து மீண்டும் கல்லா கட்டலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்.

இதற்கு ஒரே வழி, குழந்தைகளின் கல்வி எதிர்காலம்தான் ஒரு பிட்டை போட்டு தனது கணவரை ஏமாற்றியிருக்கிறார் நடிகை.

அதுமட்டுமின்றி பெரிய ஸ்டார் நடிகராக மாற, அந்த ஊரில் இருப்பதுதான் சரியாக வரும் என்றும் மண்டையை கழுவி, பிரைட் நடிகரை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

சந்தோஷத்தின் உச்சம்

சொன்னது போலவே, அக்கா சிபாரிசில் குறிப்பிட்ட படத்தில் நடிக்கவும் பிரைட் நடிகருக்கு சான்ஸ் வாங்கி கொடுத்து விட்டதால், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

குழந்தைகளின் கல்வி எதிர்காலத்துக்காக சென்றோம். வயதான பெற்றோரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள செல்கிறோம் என்று சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய்.

இந்த உருட்டுக்கு பின்னால் இருப்பதெல்லாம் அங்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டும்தான்.

குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களது கல்வி குறித்து கவலைப்படாத நடிகை, வளர்ந்த பிள்ளைகளின் கல்வி குறித்து எதற்கு கவலைப்பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நம்பர் 1 இடம்

கோலிவுட்டில் எத்தனை உருண்டு புரண்டாலும் உங்களால் நம்பர் 1 இடத்துக்கு வர முடியாது. பாலிவுட்டிலேயே உங்களை பெரிய ஸ்டார் ஆக்கும் திறமை என்னிடம் உள்ளது என கணவருக்கு ஆசை காட்டியிருக்கிறார்.

சொன்னது போலவே, அங்கு குடிபெயர்ந்தவுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் உடனே பெற்றுத் தந்து அசத்தியிருக்கிறார் நடிகை.

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. நல்ல கேரக்டர். இந்த படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று சொன்ன நடிகைக்கு, கணவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிகைக்கு குவிந்து வருகிறது.

பக்காவான பிளான்

பக்கவாக போட்ட பிளான் கைமேல் பலன் கொடுத்துள்ளதால் நடிகை ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறார். இன்னும் சில பிஸினஸ்களை நடத்தவும் நடிகை அடுத்தகட்ட முயற்சியில் இறங்கி வருகிறார்.

இங்கிருந்து அங்கு சென்றது குழந்தைகளுக்காகன்னு சொன்னது எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டாம்.. தொடர்ந்து படங்களில் நடிக்கறதுதான் உண்மையான நோக்கம்.

இது தெரியாமல் மனைவி நடிகையிடம். பிரைட் நடிகர் வசமாக ஏமாந்துள்ளார்.